உல்லாசக் கப்பலில் கிருமி அச்சத்தால் பரிதவிக்கும் பயணிகள்

உல்லாசக் கப்பலில் கிருமி அச்சத்தால் பரிதவிக்கும் பயணிகள்

1 mins read
e75e0a73-9dbc-486a-bfb5-5d2b689cbae3
ஏமனின் சானா நகரத்தில் உள்ள கோரோனா கிருமி தடுப்பு மையம். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

வெலிங்டன்: கொரோனா கிருமித்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒருவர், 'கோல்டன் பிரின்சஸ்' உல்லாசக் கப்பலில் பயணிப்பதால் நியூசிலாந்து துறைமுகத்தில் நிறுத்த நேற்று அனுமதி மறுக்கப்பட்டது. 2,600 பயணிகளும் 1,100 கப்பல் ஊழியர்களும் உள்ள நிலையில் உடல்நலமில்லாத மூவர் கப்பலின் மருத்துவரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிருமித்தொற்று உறுதி செய்யப்படும் வரை கப்பலில் உள்ளோர் வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அந்நாட்டு சுகாதார தலைமை இயக்குநர் எஷ்லி புளூம்ஃபில்ட் கூறினார். அனைத்து உல்லாசக் கப்பல்களும் ஜூன் 30 வரை நியூசிலாந்தில் நிறுத்த முடியாது என்று நேற்று முன்தினம் கொரோனா கிருமி தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் அதற்கு முன்னரே 'கோல்டன் பிரின்சஸ்' நியூசிலாந்து நீரிணையில் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.