நியூயார்க்: டென்னசி மாநிலத்தைச் சேர்ந்த மெட் கோவின் என்ற ஆடவர் ஒருவர் தம் சகோதரருடன் சேர்ந்து பல்வேறு கடைகளில் இருந்து 17,700 போத்தல் கைச்சுத்திகரிப்பான் களை வாங்கி, அவற்றை அமேசோன் இணையத்தளம் மூலம் லாப விலைக்கு விற்றார்.
அவர்கள் சுமார் 300 போத்தல் கைச்சுத்திகரிப்பான் களை விற்ற பிறகு, அமேசோன் நிறுவனம் அவரது பொருள் விவரங்களைத் தனது இணையத்தளத்திலிருந்து அகற்றி, லாப விலைக்கு விற்கக்கூடாது என்று அவரை எச்சரித்தது.
அதன் பிறகு திரு மெட், தம்மிடமிருந்த 17,400 கைச் சுத்திகரிப்பான்களை நன்கொடையாக வழங்க முடி வெடுத் தார். மூன்றில் இரண்டு பகுதி கைச்சுத்திகரிப்பான்கள் அங்குள்ள உள்ளூர் தேவாலயத்துக்கு வழங்கப்பட்டன. எஞ்சிய ஒரு பகுதியை டென்னசி மாநில தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகள் பெற்றுச் சென்றனர்.

