ரியாத்/துபாய்: கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் தொடர்பில் சவூதி அரேபியா தனது பொது இடங்களை நேற்று முன்தினம் மூடிவிட்டது. அதன் பெரும்பாலான அரசாங்க நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே கத்தாரும் ஓமானும் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளன.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஓமான், கத்தார் ஆகிய நாடுகள் புதிதாக கிருமித்தொற்று சம்பவங்கள் பற்றி அறிவித்திருக்கின்றன. அவற்றையும் சேர்த்து வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் ஆறு நாடுகளில் மொத்தம் 963 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இதுவரை மரணம் ஏதும் சம்பவிக்கவில்லை.

