கிருமித்தொற்று தடுப்பு மருந்து சோதனை அமெரிக்காவில் தொடக்கம்

1 mins read
3ae1cdd1-9ebc-4c18-81fb-5763479a63e7
கொவிட்-19 எனப்­படும் கொரோனா கிரு­மித்­தொற்­றால் இத்­தா­லி­யில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 368 பேர் உயி­ரி­ழந்­த­னர். படம்: இபிஏ/இஎஃப்ஏ -

வாஷிங்டன்: கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான மருத்துவ பரிசோதனை நேற்று தொடங்கப்பட்டது என பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்க தேசிய சுகாதாரக் கழகம் நிதியாதரவு வழங்கும் இந்தப் பரிசோதனை, சியேட்டலில் உள்ள 'கைசர் பெர்மனன்ட்' வாஷிங்டன் சுகாதாரக் கழகத்தில் 18 மாதங்க ளுக்கு நடைபெறும். இந்தப் பரிசோதனையில் சுகாதாரமான நிலையில் உள்ள 45 இளையர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.