இஸ்தான்புல்: துருக்கியில் நேற்று புதிதாக 12 கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் நிகழ்ந்ததா கத் தெரிவித்த அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஃபஹ்ரிட்டின் கோச்சா, கடந்த வாரம் தம் நாட்டில் அறிவிக்கப்பட்ட முதல் சம்பவத்திலிருந்து இவைதான் ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட ஆக அதிகமான சம்பவங்கள் என்றும் குறிப்பிட்டார். தற்போது துருக்கியில் 18 கருமித்தொற்று சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடுகள் கிருமித்தொற்றைத் தடுக்க பெரிய நடவடிக்கை கள் எடுக்க வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கடந்த வாரம் அறிவித்த பிறகு, துருக்கியும் அதற்கு உட்பட்டு கிருமித்தொற்றைத் தடுக்க தனது பள்ளிகள், பல்கலைக்கழகங்களை மூடின. விளையாட்டு நிகழ்வுகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்பட்டன. பல நாடுகளுக் குச் செல்லும் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன.
சவூதி அரேபியாவுக்குப் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் நேற்று முன்தினம் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் மதுக்கூடங் கள், இரவு விடுதிகள் நேற்று முதல் மூடப்பட்டன என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்தது.

