பெய்ஜிங்: வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்குள் வரும் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், அனைத்துலக வருகைக்கான கட்டுப்பாடுகளை சீனா கடுமையாக்கியுள்ளது. நேற்று மட்டும் அத்தகைய 12 சம்பவங்கள் நிகழ்ந்தன.
சீனாவில் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அதில் வெற்றி பெற்றிருந்தாலும் தற்போது வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு வரும் வருகையாளர்களால் புதிய கிருமித் தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுவிடுமோ என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு வருவோர் நேற்று முதல் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்று பெய்ஜிங் நகர அரசாங்கம் அறிவித்தது. இதற்கு முன் சீனாவுக்கு வருவோர் தங்கள் வீடுகளில் 14 நாட்களுக்குத் தனித்திருக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் இப்போது சிறப்பு காரணங்களுக்காக வருவோ ருக்கு மட்டும் இந்தச் சலுகை வழங்கப்படும். மற்றவர்கள் தனிமைப் படுத்தப்படும் இடங்களில் தங்கியிருக்க வேண்டும். அதற் கான செலவையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பெய்ஜிங் உத்தரவிட்டது.

