தென்கொரியாவில் நேற்று 74 சம்பவங்கள்

தென்கொரியாவில் நேற்று 74 சம்பவங்கள்

1 mins read
c7d60f36-ced7-4446-9763-4b57726360a2
படம்: ராய்ட்டர்ஸ் -

சோல்: தென்கொரியாவில் நேற்று புதிதாக 74 கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டதாக கொரிய நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய சம்பவங்களையும் சேர்த்து தென்கொரியாவில் கிருமித் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 8,236 என்றும் கூறப்பட்டது.

அவர்களில் கூடுதலாக 303 பேர் முழுமையாக குண மாகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,137 பேர் குணமாகியுள்ளனர். கொரோனா கிருமித்தொற்றுக்கு இது வரை அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.