முதியோரை தனிமைப்படுத்த பிரிட்டிஷ் அரசு திட்டம்

2 mins read
e9978283-3430-414d-b5fc-684fb29f29ef
முதி­யோரை, அதா­வது 70 வய­துக்கு மேற்­பட்­டோரை, தனி­மைப்­ப­டுத்­தும் திட்­டம் ஒன்றை பிரிட்­டன் அடுத்த சில வாரங்­களில் அறி­விக்­க­வுள்­ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

முதி­யோரை, அதா­வது 70 வய­துக்கு மேற்­பட்­டோரை, தனி­மைப்­ப­டுத்­தும் திட்­டம் ஒன்றை பிரிட்­டன் அடுத்த சில வாரங்­களில் அறி­விக்­க­வுள்­ளது.

கொரோனா கிரு­மித்­தொற்றை எதிர்­கொள்­வ­தில் பிரிட்­டன் இது­வரை மற்ற ஐரோப்­பிய நாடு­கள் அள­வுக்கு கடு­மை­யாக நடந்­து­கொள்­ள­வில்லை. ஆனால், இந்த நிலை மாற உள்­ளது.

இதன் தொடர்­பில் இந்­தக் கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக 70 வய­துக்கு மேற்­பட்­டோரை பாது­காக்­கும் முயற்­சி­யாக அவர்­களை நான்கு மாதங்­கள் வரை தனி­மைப்­ப­டுத்­தும் திட்­டம் ஒன்று அடுத்த சில வாரங்­களில் அறி­விக்­கப்­படும் என்று பிரிட்­டிஷ் சுகா­தார அைமச்­சர் மேட் ஹேன்­காக் தெரி­வித்­துள்­ளார்.

இத்­தாலி, பிரான்ஸ், ஸ்பெ­யின் போன்ற ஐேராப்­பிய நாடு­கள் மக்­கள் பெரு­ம­ளவு கூடும் இடங்­களை முடக்கி வைத்­துள்ள நிலை­யில், பிரிட்­டன் அவ்­வாறு செய்­ய­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

"முதி­யோர், அபா­யங்­க­ளுக்கு ஆளா­கக்­கூ­டிய நிலை­யில் இருப்­போர் ஆகி­யோ­ரைப் பாது­காக்­கும் பெரிய பொறுப்பு இருப்­பதை நாங்­கள் உணர்­கி­றோம். இதற்­கென சரி­யான நேரத்­தில் இந்­தத் திட்­டம் குறித்த விவ­ரங்­களை நாங்­கள் வெளி­யி­டு­வோம்.

"பொது சுகா­தா­ரத்­துக்கு ஆபத்து விளை­விக்­கக்­கூ­டி­ய­வர்­களை தனி­மைப்­ப­டுத்­தும் அதி­கா­ரத்தை நாங்­கள் கையில் எடுத்­துக்­கொள்­ளப் போகி­றோம்," என்று திரு ஹேன்­காக் விளக்­கி­னார்.

அத்­து­டன், இந்­தக் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வோரை தனி­மைப்­ப­டுத்­தும் வித­மாக சட்­டம் இயற்­றப்­படும் என்­றும் பெருந்­தி­ர­ளாக மக்­கள் கூடும் கூட்­டங் களைத் தடை செய்­ய­வும் அர­சாங்­கம் தயார் என்று அவர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, சுகா­தார வளங்­க­ளுக்கு நெருக்­கடி ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க, இந்­தக் கிரு­மித்­தொற்று உச்­ச­கட்­டத்தை எட்­டும் காலத்தை நீட்­டிக்­க­வும் பிரிட்­டன் எண்­ணம் கொண்­டுள்­ள­தாக செய்­தித் தக­வல்­கள் கூறு­கின்­றன.

தற்­போ­தைய நிலை­யில், பிரிட்­ட­னில் இந்­தக் கிரு­மித்­தொற்­றுக்கு 1,140 ஆளா­கியுள்­ள­னர் என்­றும் இத­னால் இது­வரை 21 பேர் மர­ண­ம­டைந்­துள்­ள­னர் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், இந்­தக் கிரு­மித்­தொற்று பிரிட்­ட­னில் அடுத்த ஆண்டு வசந்­த­கா­லம் வரை நீடிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கிறது.

அத்­து­டன், இதில் கிட்­டத்­தட்ட 8 மில்­லி­யன் மக்­கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"அடுத்த 12 மாதங்­களில் பொது­மக்­களில் 80 விழுக்­காட்­டி­னர் இந்­தக் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும். இவர்­களில் சுமார் 15 விழுக்­காட்­டி­னர் (அதா­வது 7.9 மில்­லி­யன் பேர்) மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட வேண்­டி­யி­ருக்­க­லாம்," என்று பிரிட்­ட­னின் மூத்த தேசிய சுகா­தார சேவை அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பப்­பட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பிரிட்­ட­னின் கார்­டி­யன் பத்­தி­ரிகை செய்தி ஒன்று தெரி­விக்­கிறது.