மகாதீர்: முகைதீனை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவில்லை

மகாதீர்: முகைதீனை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவில்லை

2 mins read
22d50c46-4e3c-42ab-b6b1-c0e4f4e0f586
-

கோலா­லம்­பூர்: பிர­த­மர் முகை­தீன் யாசின் தலை­மை­யி­லான தற்­போ­தைய அர­சாங்­கத்தை வீழ்த்த எதிர்க்­கட்­சி­க­ளி­டம் போது­மான ஆத­ரவு இல்லை என்று முன்­னாள் பிர­த­மர் டாக்­டர் மகா­தீர் கூறி­யுள்­ளார்.

தனது தலை­மை­யி­லான அர­சாங்­கம் கவிழ்ந்­த­தற்கு அன்­வார் இப்­ரா­ஹிமே கார­ணம் என்­றும் அவர் குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

கடந்த மாதம் பக்­கத்­தான் ஹரப்­பான் அர­சாங்­கம் எதிர்­பா­ரா­த­வி­த­மாக கவிழ்ந்­தது.

இதை­ய­டுத்து புதிய பிர­த­ம­ராக முகை­தீன் யாசின் பத­வி­யேற்­றார்.

இதற்கு முன்பு பக்­கத்­தான் ஹரப்­பா­னுக்கு 114 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

தற்­போது 108 உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு மட்­டுமே உள்­ளது என்று புளூம்ெ­பர்க்­குக்கு அளித்த பேட்­டி­யில் டாக்­டர் மகா­தீர் சொன்­னார்.

திரு முகை­தீன் பிர­த­ம­ராக பத­வி­யேற்­ற­தும் நாடா­ளு­மன்­றத்தை கூட்டி நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நடத்த வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

ஆனால் இரண்டு மாதங்கள் தாம­த­மாக மே 18ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என அறி­விக்­கப்­பட்­டது. இத­னால் எதிர்க்­கட்­சி­கள் ஏமாற்­ற­ம­டைந்­தன.

"எங்­க­ளுக்கு நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்மை பலம் இல்லை, நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு பிரச்­சி­னைக்­குத் தீர்­வா­காது," என்று 94 வயது மகா­தீர் சொன்­னார்.

சென்ற மாதம் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணிக்­குள் சச்­ச­ரவு ஏற்­பட்­ட­தால் டாக்­டர் மகா­தீர் பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து அதி­ர­டி­யாக வில­கி­னார்.

2018ஆம் ஆண்­டில் நடந்த பொதுத்தேர்­த­லில் அறு­பது ஆண்­டு­க­ளாக ஆட்­சி­யி­லி­ருந்த அம்னோ கட்­சியை தோற்­க­டித்து பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­டணி ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது.

ஆனால் இரண்டு ஆண்­டு­களுக்­குள்­ளா­கவே அந்த கூட்­ட­ணி­யின் ஆட்சி கவிழ்ந்­தது.

இதை­ய­டுத்து முன்­னாள் பிர­த­ம­ரான டாக்­டர் மகா­தீ­ரின் அமைச்­ச­ர­வை­யில் உள்­துறை அமைச்­ச­ராக இடம்­பெற்­றி­ருந்த முகை­தீன் யாசின் புதிய பிர­த­ம­ரா­னார். இவ­ருக்கு 2018ஆம் ஆண்டு தேர்­த­லில் படு­தோல்­வி­யைத் தழு­விய அம்­னோ­வும் இதர கட்­சி­களும் ஆத­ரவு அளிக்க முன்வந்துள்ளன.

இதற்­கி­டையே கடந்த வாரம் பேட்­டி­ய­ளித்த அன்­வார் இப்­ரா­ஹிம், எதிர்க்­கட்சி கூட்­ட­ணி­யில் டாக்­டர் மகா­தீர் இடம்­பெ­ற­வில்லை என்று கூறி­னார்.

இதனை டாக்­டர் மகா­தீர் மறுத்­துள்­ளார். திரு மகா­தீர் தொடங்­கிய பெர்­சத்­துக் கட்சி இரண்­டா­கப் பிரிந்து ஒரு பிரிவு, அர­சாங்­கத்தை ஆத­ரித்து வரு­கிறது.

இந்த பெர்­சத்­துக் கட்­சிக்கு பிரதமர் முகை­தீன் யாசின் இன்­ன­மும் தலை­வ­ராக நீடிக்­கி­றார்.