உடல் ஊனமுற்றவர்களைச் சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொன்ற ஜப்பானியருக்கு மரண தண்டனை

உடல் ஊனமுற்றவர்களைச் சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொன்ற ஜப்பானியருக்கு மரண தண்டனை

1 mins read
aeb48f02-27c4-4b51-8b72-41585e0eda55
-

தோக்­கியோ: 2016ல் ஊன­முற்­ற­வர்­களைச் சர­மா­ரி­யா­கக் கத்­தி­யால் குத்தி 19 பேரைக் கொன்ற ஜப்­பா­னி­ய­ருக்கு யோகோ­ஹமா மாவட்ட நீதி­மன்­றம் நேற்று மரண தண்­டனை விதித்தது.

தோக்­கி­யோ­வில் உள்ள பரா­ம­ரிப்பு இல்­லத்­தின் முன்­னாள் ஊழி­ய­ரான சடோஷி யூமட்சுக்கு வயது 30. நாடு முழு­வ­தும் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­திய இந்­தச் சம்­ப­வம் காரணமாக ஜப்­பா­னில் உடல் ஊன­முற்­ற­வர்­கள் நடத்தப்படும் விதம் குறித்து கேள்வி எழுந்தது.

இவ்­வாண்டு தொடக்­கத்­தில் வழக்கு விசா­ரணை தொடங்­கி­ய­போது சகா­மி­ஹாரா இல்­லத்­தின் முன்­னாள் ஊழி­ய­ரான யூமட்சு எதிர்ப்பு எது­வும் தெரி­விக்­க­வில்லை. ஆனால் அவ­ரது வழக்­க­றி­ஞர் முன்­னாள் ஊழி­ய­ரின் மன­நி­லையை சுட்­டிக்­காட்டி குற்­ற­வாளி அல்ல என்று வாதிட்டார். சம்­ப­வம் நடந்த சமயத்தில் அவர் போதை­யில் இருந்­த­தா­க­வும் அவ­ரது வழக்­க­றி­ஞர் கூறி­னார்.

2016 ஜூலை 26ஆம் தேதி சுகுய் யம­யூரி-என் பரா­ம­ரிப்பு இல்­லத்­தில் கத்­தி­க­ளு­டன் யூமட்சு நுழைந்­தார்.

பின்­னர் ஒவ்­வொரு அறை­யி­லும் உறங்­கிக் கொண்­டி­ருந்­த­வர்­களை அவர் கத்தியால் தாக்­கி­னார். இதில் 19 முதல் 70 வயது வரை­யிலான 19 பேர் மாண்டனர். மேலும் 25 பேர் காயம் அடைந்­த­னர்.

கத்­தி­யால் தாக்­கிய பிறகு அவர் போலி­சில் சரண் அடைந்­தார்.

மனநிலை பாதிக்கப்பட்டவர் களால் சமூகத்திற்கு ஒரு பயனும் இல்லை என்று முன்பு மெய்னிச்சி ஷிம்புனுக்கு அளித்த பேட்டியில் யூமட்சு கூறியிருந்தார்.