நைஜீரியாவில் எரிவாயுக் குழாய் வெடித்து 17 பேர் உயிரிழந்தனர்

நைஜீரியாவில் எரிவாயுக் குழாய் வெடித்து 17 பேர் உயிரிழந்தனர்

1 mins read
fb0bf8d2-f91f-4060-81dc-a460dbd9d602
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சேர்த்தனர்.  இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருவதாக போலிசார் தெரிவித்துள்ளனர். படம்: ஊடகம். -

லாகோஸ்: நைஜீரியா நாட்டில் லாகோஸ் மாகாணம் அபுலி - அடோ பகுதியில் பதிக்கப்பட்டுள்ள எரிவாயுக்குழாய் நேற்று முன்தினம் திடீரென வெடித்துச்சிதறியது. இந்த விபத்தில் எரிவாயுக்குழாய் பதிக்கப்பட்ட இடத்தை சுற்றியிருந்த பல்வேறு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். 25க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சேர்த்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருவதாக போலிசார் தெரிவித்துள்ளனர்