கொவிட்-19: மலேசியாவில் முதல் 2 உயிரிழப்புகள்

கொவிட்-19: மலேசியாவில் முதல் 2 உயிரிழப்புகள்

1 mins read
2b71c9b8-2b6c-49ea-b024-f8e4f5dab06f
கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறை ஊழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் இருவர் மடிந்துவிட்டனர்.

முதலாமவர் சரவாக்கைச் சேர்ந்த 60 வயது தேவாலயப் பாதிரியார்.

அவர் நேற்றுக் காலை 11 மணிக்கு மரணமுற்றார்.

மற்றவர், ஜோகூர் பெர்மாய் மருத்துவமனையில் உயிர் நீத்த 34 வயது ஆடவர்.

அவர் கோலாலம்பூருக்கு அருகில் நடைபெற்ற சமயக் கூட்டத்துக்குச் சென்றிருந்தவர்களுள் ஒருவர்.

இன்று புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட 120 கிருமித்தொற்று சம்பவங்களையும் சேர்த்து, மலேசியாவில் இதுவரை 673 கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

#மலேசியா #கொரோனா

குறிப்புச் சொற்கள்