சிகிச்சையளித்த மருத்துவருக்கும் பாதிப்பு

சிகிச்சையளித்த மருத்துவருக்கும் பாதிப்பு

1 mins read
424e87f0-e4be-4619-9b7f-6797b90a8be5
கோப்புப்படம்: ஊடகம் -

கர்நாடகா - சிகிச்சையளித்த மருத்துவருக்கும் பாதிப்பு: பெங்களூரு: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் முதன்முதலில் உயிரிழந்த 76 வயது முதியவருக்குச் சிகிச்சையளித்த 63 வயது மருத்துவரையும் கிருமி தொற்றியது. இதையடுத்து, அவரும் அவரின் குடும்பத்தினரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

கேரளா - 'தனிமை'யில் மத்திய இணை அமைச்சர்: திருவனந்தபுரம்: தான் பங்கேற்ற கூட்டத்தில் இருந்த மருத்துவர் ஒருவரை கொரோனா கிருமி தொற்றியதை அடுத்து மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளிதரன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்தார். பின்னர் அவர் கொரோனா கிருமித்தொற்றுச் சோதனை செய்துகொண்டார். அதில் அவரைக் கிருமி தொற்றவில்லை என்பது உறுதியானது.

மகாரா‌ஷ்டிராவில் தனிமைப்படுத்தப்படுவோரின் கையில் முத்திரை: ஆக அதிகமாக 36 பேர் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுவோர் வெளியில் செல்வதைத் தடுக்கும்விதமாக அவர்களின் கைகளில் அழியாத மையால் இப்படி முத்திரையிடப்படுகிறது.