உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் இருவர் பாதிப்பு

உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் இருவர் பாதிப்பு

1 mins read

ஜெனீவா: உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் இரண்டு ஊழி­யர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

அவர்­களில் ஒரு­வர் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து வீடு திரும்­பிய பிறகு கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­ட­தா­க­வும் மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் அவ­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­ட­தா­க­வும் உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் செய்­தித்­தொ­டர்­பா­ளர் தெரி­வித்­தார்.

கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக உலக சுகா­தார நிறு­வ­னம் எடுத்து வரும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னரா என்­பது குறித்து தக­வல் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தலை­மை­ய­கத்­தில் 2,400 ஊழி­யர்­கள் பணி­பு­ரி­கின்­ற­னர்.