அமெரிக்காவில் பதற்றம்

அமெரிக்காவில் பதற்றம்

2 mins read
795c41fb-13ea-46ec-bb6b-3fc29db96c52
கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக அமெ­ரிக்­கா­வில் குழப்­ப­மும் பதற்­ற­மும் நில­வு­கிறது. கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தால் அந்­நாட்­டில் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கை­கள் பற்­றாக்­குறை ஏற்­படும் அபா­யம் உள்­ளது. படம்: ஊடகம் -

வாஷிங்­டன்: கொவிட்-19 எனப்­படும் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக அமெ­ரிக்­கா­வில் குழப்­ப­மும் பதற்­ற­மும் நில­வு­கிறது. கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தால் அந்­நாட்­டில் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கை­கள் பற்­றாக்­குறை ஏற்­படும் அபா­யம் உள்­ளது.

இதன் விளை­வாக கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருப்­போர் யார் என்­ப­தைக் கண்­ட­றிந்து அவர்­க­ளுக்கு மட்­டும் முத­லில் சிகிச்சை அளிக்­கும் நிலை ஏற்­ப­டக்­கூ­டும் என்று மருத்­து­வர்­கள் அஞ்­சு­கின்­ற­னர்.

அமெ­ரிக்­கா­வில் இது­வரை 4,200 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அந்­நாட்­டில் அந்­நோ­யின் கார­ண­மாக 73 பேர் மர­ணம் அடைந்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, பேரங்­கா­டி­களில் காலி­யாக இருக்­கும் அல­மா­ரி­க­ளைப் பார்த்து அமெ­ரிக்­கர்­க­ளின் மன­தில் எட்­டிப்­பார்த்­தி­ருக்­கும் பயம் கூடி­யுள்­ளது.

அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் கிடைக்­கா­த­தால் பலர் மன­வு­ளைச்­ச­லுக்கு உள்­ளா­கி­யி­ருப்­ப­தாக ஹார்­வர்ட்­டின் பொது சுகா­தா­ரப் பிரி­வைச் சேர்ந்த உத­விப் பேரா­சி­ரி­யர் டாக்­டர் தாமஸ் சாய் தெரி­வித்­தார்.

"மருத்­து­வர்­க­ளுக்­கான பாது­காப்பு ஆடை­கள் போது­மான அள­வுக்கு இல்­லா­மல் போகும்­போது அத­னால் ஏற்­படும் பதற்­ற­நி­லையை நினைத்­துப்­பார்க்க முடி­ய­வில்லை. நெருக்­க­டி­நிலை மோச­ம­டைந்­தால் நிலைமை மிக­வும் பயங்­க­ர­­மாக இருக்­கும் என அஞ்­சு­கி­றேன். அடுத்த சில நாட்­களில், சில வாரங்­களில் நடக்­கப்­போ­வ­தைப் பார்த்­து­தான் எது­வும் சொல்ல முடி­யும்," என்­றார் அவர்.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­போ­ரைத் தனி­மைப்­ப­டுத்த தேவை­யான விடு­தி­களை வாஷிங்­டன் மாநி­லத்­தில் அமைக்க அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் முடி­வெ­டுத்­துள்­ள­னர்.

இது அங்­குள்­ள­வர்­களை கோப­ம­டை­யச் செய்­துள்­ளது. நோயுண்­ட­வர்­களை அங்கு தனி­மைப்­ப­டுத்­தி­னால் தங்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபா­யம் அதி­கமா­வ­தாக அவர்­கள் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் அமெ­ரிக்­கா­வில் மர­ணம் அடைந்­தோ­ரில் பாதிக்கு மேற்­பட்­டோர் வாஷிங்­டன் மாநி­லத்­தில் தலை­ந­க­ரான சியாட்­ட­லுக்கு அரு­கில் உள்ள கிங் கௌண்­டி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அமெ­ரிக்­கா­வின் வட­மேற்­குப் பகு­தி­யில் உள்ள வாஷிங்­டன் மா

நி­லத்­தி­ன­ரின் அன்­றாட வாழ்க்கை முடக்­கப்­பட்­டுள்­ளது. அங்­குள்ள உண­வ­கங்­கள், உடற்­ப­யிற்­சிக்­

கூ­டங்­கள், மது­பா­னக்­கூ­டங்­கள், அருங்­காட்­சி­ய­கங்­கள் ஆகி­யவை மூடப்­பட்­டுள்­ளன. தங்­க­ளைச் சுய­மாக தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக வாஷிங்­டன் மாநில அதி­கா­ரி­கள் நான்கு சொத்­து­களை வாங்­கி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் உள்ள உண­வ­கங்­கள், மது­பா­னக்­கூ­டங்­கள் ஆகி­ய­வை மூடப்­பட்­டுள்­ளது. "எங்­க­ளுக்கு என்ன செய்­வ­தென்றே தெரி­ய­வில்லை," என்று கடந்த ஆண்டு திறக்­கப்­பட்ட உண­வ­கத்­தின் உரி­மை­யா­ள­ரின் உற­வி­னர் ஒரு­வர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் வருத்­தம் தெரி­வித்­தார்.