கொரோனா கிருமியின் பிடியிலிருந்து உயிர் தப்பிய 103 வயது மூதாட்டி

கொரோனா கிருமியின் பிடியிலிருந்து உயிர் தப்பிய 103 வயது மூதாட்டி

1 mins read
8c35b318-989a-48c2-adb3-02772bf38b5e
ஈரான் மருத்துவமனை ஒன்றில் மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனை. படம்: ஏஎஃப்பி -

ஈரானில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட 103 வயது மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்.

முதியோருக்கு கொரோனா கிருமி தொற்றினால் ஆபத்து அதிகம் என்று கூறப்பட்டது. ஆனால் 103 வயது மூதாட்டி உயிர் பிழைத்திருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

செம்னான் நகரில் பெயர் தெரிவிக்கப்படாத அந்த மூதாட்டிக்கு ஒரு வார காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு முழுமையாக குணமடைந்து அவர் வீடு திரும்பினார் என்று செம்னான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தலைவர் நேவிட் டனாயியை மேற்கோள்காட்டி இர்னா செய்தி நிறுவனம் கூறியது.

ஈரானில் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகி உயிர்பிழைத்த இரண்டாவது மூதாட்டி இவர்.

இதற்கு முன் கெர்மானைச் சேர்ந்த 91 வயது பாட்டி கிருமியால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார் என்று ஈரானின் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ஆனால் இருவருக்கும் எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றி தெரியவில்லை.

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ஈரானில் முதல் நபர் கிருமியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு நாடு முழுவதும் பரவி ஏறக்குறைய 1,000 பேர் கிருமிக்கு பலியாகிவிட்டனர்.

#கொரோனா #ஈரான்

குறிப்புச் சொற்கள்