அமெரிக்காவில் கிருமித்தொற்று: 6,300 பேர் பாதிப்பு; 108 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கிருமித்தொற்று: 6,300 பேர் பாதிப்பு; 108 பேர் உயிரிழப்பு

2 mins read
cddc9b28-18db-4549-b76f-4695ae57a787
அதி­பர் டிரம்ப்பின் நிர்­வா­கம், ஒரு டிரில்­லி­யன் டாலர் மதிப்­பில் பொரு­ளி­ய­லை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு அறை­கூ­வல் விடுத்­துள்­ளது. படம்: இபிஏ -

வாஷிங்­டன்: உலக நாடு­களை ஆட்­டிப் படைத்­துக் கொண்­டி­ருக்­கும் கொரோனா கிருமி, உலக வல்­ல­ரசு என்று அமெ­ரிக்­காவை விட்­டு­வி­ட­வில்லை. அந்நாட்டில் ஐம்­பது மாநிலங்க­ளுக்­கும் கிருமி பர­வி யுள்ளது.

வெஸ்ட் வெர்­ஜி­னியா மாநி­லத்­தில் முதல் முறை­யாக ஒரு­வர் கிரு­மித் தொற்­றுக்கு ஆளா­கி­யி­ருக்­கி­றார். முதல் கிரு­மித் தொற்­றுச் சம்­ப­வத்தை அறி­வித்த அம்­மா­நில ஆளு­நர் ஜிம் ஜஸ்­டிஸ், எங்­கள் மாநி­லத்­துக்­கும் கிருமி வரும் என்­பதை தெரிந்து வைத்­தி­ருந்­தோம் என்­றார்.

இந்த நிலை­யில் சான் ஃபிரான்­சிஸ்­கோ­வில் உள்ள பே ஏரியா முடக்­கப்­பட்­ட­தைப் போல நியூ யார்க் நக­ரை­யும் முடக்­கு­வது பற்றி ஆரா­யப்­பட்டு வரு­கிறது.

அமெ­ரிக்கா முழு­வ­தும் இது­வரை கிரு­மித் தொற்­றுக்கு 108 பேர் பலி­யா­கி­விட்டனர். நாடு முழு­வ­தும் 6,300க்கும் மேற்­பட்­டோர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அதி­பர் டிரம்ப்பின் நிர்­வா­கம், ஒரு டிரில்­லி­யன் டாலர் மதிப்­பில் பொரு­ளி­ய­லை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு அறை­கூ­வல் விடுத்­துள்­ளது. மேலும் கொரோனா கிருமி பர­வல் விவ­கா­ரத்­தில் அர­சாங்­கம் உட­ன­டி­யாக செயல்­ப­டத் தவ­றி­னால் 20 விழுக்காடு வேலை இழப்பு ஏற்படும் என்று குடி­ய­ர­சுக்­கட்­சி­ செனட்­டர்­களை நிதி­ய­மைச்­சர் ஸ்டீ­வன் மினுச்­சின் எச்­ச­ரித்­துள்­ளார்.

இதற்­கி­டையே கொரோனா கிருமி பர­வல் கொள்ளை நோயாக உரு­மா­றும் என்­பது தமக்கு முன்­னரே தெரி­யும் என்று வெள்ளை மாளி­கை­யில் செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய அதி­பர் டிரம்ப் குறிப்பிட் டார்.

"கொள்ளை நோய் என அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­பா­கவே அது கொள்ளை நோயாக பர­வும் என்­பதை முன்­கூட்­டியே உணர்ருந் திருந்­தேன்," என்று அவர் சொன்னார்.

செவ்­வாய்க் கிழமை அன்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கொரோனா கிரு­மிக்கு எதி­ராக தமது குழு எடுத்­து­வ­ரும் நட­வ­டிக்­கை­களை பாராட்டினார்.

ஆனால் செய்தி ஊட­கங்­க­ளு­ட­னான உறவை தமது குழு தவறாக கையாண்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.