கிருமி பரவல்; ஐரோப்பிய எல்லையை முப்பது நாட்களுக்கு மூட தலைவர்கள் முடிவு

2 mins read
c91dc425-4a7e-4cb4-b532-92fb215b24c1
-

பெர்­லின்: கொரோனா கிருமி பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கோடு ஐரோப்­பிய எல்­லை முழு­மை­யாக மூடப்­ப­டு­கிறது.

வெளி­நாட்­டி­லி­ருந்து ஐரோப்­பா­வுக்­குள் நுழைய 30 நாட்­க­ளுக்கு தடை விதிக்க ஐரோப்­பிய தலை­வர்­கள் முடிவு செய்­துள்­ள­னர்.

ஐரோப்­பா­வில் நாளுக்கு நாள் கொரோனா கிருமி பரவி வரு­கிறது. இதில் இத்­தாலி மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் ஐரோப்­பிய நாடு­கள் ஒன்­றாக இணைந்து கொரோனா கிரு­மிக்கு எதி­ராக புதிய நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளன.

காணொளி மூலம் சந்­தித்த 27 நாடு­க­ளின் தலை­வர்­கள், ஐரோப்­பிய வட்­டா­ரத்­தில் தேவை­யற்ற பய­ணங்­க­ளுக்­குத் தடை விதிக்க இணக்­கம் தெரி­வித்­த­னர்.

இந்த யோச­னையை பிரான்ஸ் முன்­மொ­ழிந்­தி­ருந்­தது. இத­னால் உறுப்பு நாடு­கள் மற்­றொரு உறுப்பு நாட்­டுக்­காக கதவை மூட வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

ஆரம்­பத்­தில் முப்­பது நாட்­க­ளுக்குத் தடை நீடிக்­கும். ஆனால் இந்­தத் தடை நாடு திரும்­பும் ஐரோப்­பி­யர்­கள், சமூக சேவை ஊழி­யர்­கள், எல்­லை­க­ளுக்கு இடையே பணி­யாற்­றும் ஊழி­யர்­கள், முன்­னாள் ஐரோப்­பிய உறுப்பு நாடான பிரிட்­ட­னின் குடி­மக்­கள் ஆகியோருக்கு பொருந்­தாது எனத் தெரிவிக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே ஐரோப்­பிய தடையை ஜெர்­மனி உட­ன­டி­யாக அமல்­ப­டுத்­தும் என்று பிர­த­மர் ஏஞ்­சலா மெர்க்­கல் குறிப்­பிட்­டார்.

ஐரோப்­பா­வின் மிகப்­பெ­ரிய பொரு­ளி­யல் நாடான ஜெர்­மன் இதற்கு முன்பு தனது எல்­லை­களை மட்­டும் மூடி­யி­ருந்­தது.

"இது ஒரு தற்­கா­லிக நட­வ­டிக்கை, நீண்டநாட்­க­ளுக்கு தேவை­யி­ருக்­காது," என்று சுவீ­டன் உள்­துைற அமைச்­சர் மிகைல் டாம்ெபர்க் தெரி­வித்­ தார்.

பிரான்ஸ் அதி­பர் இம்­மா­னு­வேல் மெக்­ரோ­னின் அலு­வ­ல­கம், ஒருங்­கி­ணைக்­கப்­ப­டாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு கண்­ட­னம் தெரி­வித்தது.

ஒவ்­வொரு நாட்­டின் பொரு­ளி­யலைப் பாதிக்­கும் கொரோனா கிரு­மிக்கு எதி­ரான நட­வ­டிக்கை ஒருங்­கி­ணைப்­ப­டா­மல் இருந்­தால் ஒரு பய­னும் இல்லை என்­று அது வலியுறுத்தியது.