மனிதர்கள் மீது தடுப்பூசியை சோதிக்கத் தயாராகும் சீனா

1 mins read
3bdbe479-2ed9-466c-96e7-7ec6cc531127
வூஹான் கிருமித் தொற்று காரணமாக சீனாவில் மாண்டோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்தது. இதுவரை 2,300 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். படம்: ஏஎப்பி -

பெய்ஜிங்: கொரோனா கிருமிக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதித்துப் பார்க்க சீனாவின் 'கென்சினோ பயோலோஜிக்ஸ்' நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் பகுதியில் இச்சோதனைகள் நடத்தப்படும் என்று நிறுவனம் நேற்று கூறியது. தடுப்பூசி 18 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட 108 ஆரோக்கியமான பெரியவர்களின் உடலில் செலுத்தப்படும். இம்மாதம் தொடங்கும் இச்சோதனைகள் இவ்வாண்டு இறுதியில் முடிவுறும் என்று கூறப்படுகிறது. உலகமெங்கும் பரவியுள்ள கொவிட்-19 கிருமித்தொற்றால் 190,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.