இந்தோனீசியாவில் ஒரே நாளில் 55 புதிய கிருமித்தொற்றுகள்

இந்தோனீசியாவில் ஒரே நாளில் 55 புதிய கிருமித்தொற்றுகள்

1 mins read
48af4a2e-9b98-486e-b1bd-7536b71afc50
தென்கிழக்காசிய நாடுகளில் ஆக அதிகமாக இந்தோனீசியாவில் கொரோனா கிருமித் தொற்றுக்கு 19 பேர் பலியாகியுள்ளனர். படம்: ஏஎப்பி -

ஜகார்த்தா: ஒரே நாளில் ஆக அதிக எண்ணிக்கையான 55 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் இந்தோனீசியாவில் பதிவாகியுள்ளன. இத்துடன் அங்கு உறுதி செய்யப்பட்ட மொத்த சம்பவங்கள் 227 என்று கூறப்படுகிறது. கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. தென்கிழக்காசிய நாடுகளில் இதுவே ஆக அதிக உயிரிழப்பு எண்ணிக்கை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேவைக்கு அதிகமான பொருட்களை மக்கள் வாங்குவதைத் தடுக்க இந்தோனீசிய போலிஸ் கடைக்காரர்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.