பேங்காக்: தாய்லாந்தில் நேற்று மட்டும் 35 புதிய கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதியாகின. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த தொற்றுச் சம்பவங்கள் 212ஆக உயர்ந்துள்ளன. இதுவரை 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 169 பேர் மருத்துவமனையில் இருக்கின்றனர். ஒருவர் உயிரிழந்துவிட்டார். புதிய சம்பவங்களில் சிலர் ஏற்கெனவே கிருமி தொற்றியோருடன் தொடர்பில் இருந்தவர்கள். வேறு சிலர் கம்போடியாவிலிருந்து வந்தவர்கள் என்று கூறப்பட்டது. படம்: ஏஎப்பி
தாய்லாந்தில் 212 கிருமித்தொற்று சம்பவங்கள், ஒருவர் மரணம்
1 mins read
தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் உள்ள தெப்வரரம் கோயிலின் சுற்றுச்சுவரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொண்டூழிர்கள். படம்: ஏஎப்பி -

