'கடுமையான நடவடிக்கைகள் தேவை'

'கடுமையான நடவடிக்கைகள் தேவை'

2 mins read
11d8bcd9-100a-4995-a04f-09232ad36f88
-

கொரோனா கிரு­மித்­தொற்று கட்­டுக்­க­டங்­கா­மல் பரவி வரு­கிறது. இத­னால் கிரு­மிக்கு எதி­ராக தென்­கி­ழக்­கா­சிய நாடு­கள் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் எச்­ச­ரித்­துள்­ளது.

சமூ­கத்­தி­ன­ரி­டையே கிரு­மிப் பர­வல் பல நாடு­களில் ஏற்­ப­ட­வுள்­ள­தாக நிறு­வ­னம் சுட்­டி­யது.

தென்­கி­ழக்­கா­சிய வட்­டா­ரத்­தில் கடந்த சில வாரங்­களில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ளவு உயர்ந்­து­விட்­டன.

இத­னால் எல்­லை­களை மூடு­வது, பள்­ளி­களை அடைப்­பது, ஊர­டங்கு விதிப்­பது, விளை­யாட்டு நிகழ்­வு­களை ரத்து செய்­வது போன்ற பல அதி­ரடி நட­வ­டிக்­கை­களை நாடு­கள் செயல்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

இதற்­கி­டையே சில தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளின் பொது சுகா­தார பரா­ம­ரிப்பு அமைப்­பு­கள் வலு­வாக இல்லை என்­றும் அத­னால் விஸ்­வ­ரூ­பம் எடுக்­கும் இந்­தக் கிரு­மித்­தொற்றை அந்­நா­டு­க­ளால் சமா­ளிக்க முடி­யாது என்­றும் கவலை எழுந்­துள்­ளது.

"மேலும் பல­ருக்­குக் கிருமி தொற்றி விடா­மல் தடுக்க நாம் உடனே நமது முயற்­சி­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும்," என்று நிறு­வ­னத்­தின் வட்­டார இயக்­கு­நர் பூனம் கெட்­ர­பால் சிங் கூறி­னார்.

பல கிரு­மிப்­ப­ர­வல் குழு­மங்­கள் கண்­ட­றி­யப்­ப­டு­கின்­றன. எச்­ச­ரிக்­கை­யா­க­வும் திற­மை­யா­க­வும் நடந்த கண்­கா­ணிப்­பில் குழு­மங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டா­லும் கொவிட்-19 மேலும் பர­வு­வ­தைத் தடுக்­கச் சமூ­கத்­தி­னர் ஒன்­று­பட்டு முயல வேண்­டும் என்­பது முக்­கி­ய­மா­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"நாம் மேலும் பல நட­வ­டிக்­கை­க­ளைச் செயல்­ப­டுத்த வேண்­டும். அது­வும் உட­ன­டி­யாக அவற்­றைச் செய்ய வேண்­டும்," என்­றார்.

தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் ஆக அதி­க­மான கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் மலே­சி­யா­வில்­தான் பதி­வா­கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

நேற்­றைய 117 புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளு­டன் தற்­போது அங்கு 790 சம்­ப­வங்­கள் உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளன. சென்ற மாதம் கோலா­லம்­பூ­ரில் உள்ள ஒரு பள்­ளி­வா­ச­லில் நடை­பெற்ற சமய நிகழ்­வில் கலந்­து­கொண்­டோ­ரில் 514 பேருக்­குக் கிருமி தொற்­றி­யுள்­ளது. இந்­தக் கிரு­மிப்­ப­ர­வல் குழு­மமே அந்­நாட்­டின் ஆகப் பெரிய குழு­ம­மாக உள்­ளது.

இதற்­கி­டையே மலே­சி­யா­வில் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை விதிக்­கப்­ப­டு­வ­தாக மலே­சிய பிர­த­மர் முகை­தீன் யாசின் திங்­கட்­கி­ழமை இரவு அறி­வித்­தார்.

நேற்று முதல் நடப்­புக்கு வந்த ஆணை இம்­மா­தம் 31ஆம் தேதி­யன்று முடி­வு­றும்.

கைக­ளைச் சுத்­த­மா­கக் கழு­வு­வது, அணுக்­க­நி­லை­யைத் தவிர்ப்­பது போன்ற எளிய செயல்­கள், கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரில் முக்­கி­ய­மா­னவை. அவையே சமூ­கத்­தில் கிரு­மித்­தொற்று பர­வலை வெகு­வா­கக் குறைக்­கும் என்று திரு­வாட்டி சிங் வலி­யு­றுத்­திச் சொன்­னார்.