தாய்லாந்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா கிருமி தொற்றி யுள்ளது. இதனுடன் அந்நாட்டின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 272க்கு உயர்ந்துள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த அறுபது பேரில் 43 பேர், முன்னைய நோய்த்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையோர். எஞ்சிய 17 பேர் இத்தாலி, மலேசியா, ஜப்பான், ஈரான், தைவான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சின் நோய்க் கட்டுப்பாட்டு ப் பிரிவு தெரிவித்தது.
தாய்லாந்தில் இதுவரை ஒருவர் கொவிட் -19 நோய்க்கிருமியால் உயிரிழந்தார். அத்துடன் 42 நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். 229 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

