வெஸ்ட் கோஸ்ட் உணவங்காடி நிலையத்தில் திரு ரெஷி குமார் தென்னரசு இருந்தபோது, தனது மனைவி உடற்குறையுள்ளோர் பயன்படுத்தும் கழிவறையில் முன்பின் அறிமுகமில்லாத ஓர் ஆடவருடன் மாட்டிக்கொண்டார் என்று ஒருவர் உதவி கேட்டார். உடனே செயலில் இறங்கிய ரெஷி, கழிவறையின் 2 மீட்டர் உயரமுள்ள சுவரில் தாவி ஏறி, கழிவறைக்குள் புகுந்து, அந்த ஆடவரை பெண்ணிடமிருந்து ஒதுங்கியிருக்குமாறு சொல்லி, கழிவறைக் கதவைத் திறந்தார். போலிஸ் அங்கு வந்து சேர்ந்த துடல் அந்த ஆடவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், திரு ரெஷியின் உதவியுடன் அவர் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அந்த ஆடவர் மானபங்கச் செயலுக்காக கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் உதவி தேவைப்பட்டோருக்குத் தக்க நேரத்தில் உதவிக்கரம் நீட்டியதற்காக திரு ரெஷிக்கு நேற்று பொது உணர்வு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அதை அவருக்கு வழங் கிய கிளமெண்டி போலிஸ் பிரிவின் தலைவர் உதவி ஆணையாளர் ஜெரட் பெரேரா பேசுகையில், "குடிமை உணர்வுடனும் தைரியத் துடனும் செயல்பட்டார் திரு ரெஷி. அவரது செயல் சமூகத்தில் உள்ளவர்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறது," என்றார்.
கழிவறையில் சிக்கிக்கொண்ட மாதைக் காப்பாற்றிய இந்தியருக்கு விருது
1 mins read
-

