கிருமிப் பரவல்: சீனாவை மிஞ்சியது ஐரோப்பா

கிருமிப் பரவல்: சீனாவை மிஞ்சியது ஐரோப்பா

2 mins read
aa4c359a-4146-48f6-8db6-cee743c6e1e8
உக்ரைனில் பேருந்தில் 10 பேர் மட்டுமே பயணம் செய்யலாம் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்தில் ஏறுவதற்காக பலர் வரிசைப்பிடித்து நின்றிருந்தனர். படம்: ஏஎஃப்பி -

லண்­டன்: ஐரோப்­பா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை சீனாவை மிஞ்­சி­விட்­டது என்­கிறது புளும்­பர்க்­கின் தக­வல் தொகுப்பு.

ஐரோப்­பா­வில் 85,000 என்ற கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை, சீனா­வில் பாதிக்­கப்­பட்ட 80,900 பேர் என்­ப­தை­விட அதி­கம்.

அது­போல் உயி­ரி­ழப்­பு­க­ளின் எண்­ணிக்­கை­யும் ஐரோப்­பா­வில் கிட்­ட­தட்ட 4,000ஐ எட்­டி­யி­ருக்க, சீனா­வில் அந்த எண்­ணிக்கை 3,200 என்­றுள்­ளது.

ஐரோப்­பிய நாடு­களில் கிரு­மித் தொற்­றால் ஆக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள இத்­தா­லி­யில் மட்­டும் 2,978 பேர் பலி­யா­கி­னர்.

இத்­தா­லிக்கு அடுத்து மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள ஸ்பெ­யி­னில் முதி­யோர் இல்­லம் ஒன்­றில் மட்­டும் 19 பேர் மாண்­ட­தற்கு கிரு­மித் தொற்று கார­ண­மாக இருக்­க­லாம் என்­பது குறித்து குற்ற விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

அந்த இல்­லத்­தில் வசிக்­கும் 130 பேரில் 70 பேருக்கு கிரு­மித் தொற்­றி­யி­ருக்­க­லாம் என்று அங்கு வசிப்­ப­வர்­க­ளின் உற­வி­னர்­கள் கூறி­ய­தாக ஏஎ­ஃப்பி செய்தி தெரி­விக்­கி

றது.

ஸ்பெ­யி­னில் இது­வரை 13,700 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 600ஐ நெருங்­கி­யது.

இன்­னோர் ஐரோப்­பிய நாடான பிரான்­சில் 9,134 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். நேற்று மட்­டும் 89 பேர் பலி­யா­ன­தைத் தொடர்ந்து அங்கு உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 264ஆக அதி­க­ரித்­தது.

ஐரோப்­பிய நாடுகள், அமெ­ரிக்­கா­வில் கிரு­மித் தொற்று இந்­த­ள­வுக்கு மிக வேக­மாக பர­வு­வது பல­ரை­யும் ஆச்­சர்­யப்­பட வைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், ஒரு மாதத்­திற்கு முன்பு சாத்­தி­ய­மற்­றது என்று தோன்­றி­ய­தும் சீனா மற்­றும் ஆசிய நாடு­களில் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டு­ப­டுத்த நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­து­மான சமூக தூர விதி, பய­ணக் கட்­டுப்­பா­டு­கள், மக்­கள் நட­மாட்ட கட்­டுப்­பாடு போன்­ற­வற்றை இந்­நா­டு­கள் செயல்­ப­டுத்­தின.

மேலும், பரி­சோ­தனை, மக்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­து­தல் ஆகி­யவை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தால் கிரு­மிப் பர­வல் குறை­யக்­கூ­டும் என்று அந்­நாட்டு அதி­கா­ரி­கள் நம்­பிக்கை கொண்­டுள்­ள­னர்.

வெளி­நாட்டு பய­ணி­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்ள ஜெர்­ம­னி­யில், புதன்­கி­ழமை நில­வ­ரப்­படி 8,198 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 12 பேர் பலி­யா­கி­னர்.

ஜெர்­மனி தலை­வர் ஏஞ்­சலா மெர்­கல் தொலைக்­காட்சி வழி நாட்டு மக்­க­ளி­டையே பேசிய போது, கட்­டுப்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைக்­கு­மாறு மக்­க­ளி­டம் வலி­யு­றுத்­தி­னார்.

மேலும் இரண்­டாம் உல­கப் போருக்கு பின்­னர், நாடு எதிர்­கொள்­ளும் மிகப்­பெ­ரிய சவால் இந்த கிரு­மித் தொற்று என்­றும் அவர் சொன்­னார்.