கொவிட்-19 கிருமித் தொற்று அச்சுறுத்தலுக்கு எதிராக ஆப்பிரிக்கா 'விழித்து கொள்ள வேண்டும்' என்றும் மோசமான நிலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளில் கிருமிப் பரவல் எப்படி அதிகரித்துள்ள என்பதிலிருந்து ஆப்பிரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப் பின் முதல் ஆப்பிரிக்க தலைவரான டெட்ரேஸ் கூறினார்.
ஆப்பிரிக்காவின் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் சுமார் 640 என்று குறைவாக இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருப் பது அவசியம் என்றார். கிருமிப் பரவல் மோசமடைந் தால், ஆப்பிரிக்காவில் உள்ள பொது சுகாதார அமைப்புக
ளால் சமாளிக்க முடியாமல் போய்விடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

