டிரம்ப்: சீன கிருமி என்றதில் எந்த தவறும் இல்லை

டிரம்ப்: சீன கிருமி என்றதில் எந்த தவறும் இல்லை

1 mins read
9bb6430c-9b50-42a5-9838-670544166fd1
-

வாஷிங்­டன்: கொவிட்-19 கிருமி சீனா­வி­லி­ருந்து பர­வத் தொடங்­கி­ய­தால், தான் 'சீன கிருமி' என்று சொன்­ன­தா­க­வும் அதில் எந்த தவ­றும் இல்லை என்­றும் கூறி­யுள்­ளார் அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப்.

சீன வெளி­யு­றவு அமைச்­சக செய்­தித் தொடர்­பா­ளர் ஜாவோ லிஜி­யன். கிரு­மித் தொற்றை அமெ­ரிக்க ராணு­வத்­தோடு தொடர்­பு­ப­டுத்த முயன்­ற­தை­ய­டுத்து, டிரம்ப் 'சீன கிருமி' என்று கூறி­னார்.

அன்­றாடச் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் பேசியபோது, தான் சீன கிருமி என்று கூறி­ய­தில் இன­வாத கருத்து ஏது­மில்லை. அது சீனா­வில் இருந்து பர­வத் தொடங்­கி­ய­தால் தான் அவ்­வாறு கூறி­னேன் என்­றார்.

கிரு­மித் தொற்­றுக்கு எதி­ரான நட­வ­டிக்கை பற்றி பேசிய அவர், "கண்­ணுக்கு தெரி­யாத எதி­ரி­யு­டன் நாம் போரில் ஈடு­பட்­டுள்­ளோம். நாம் மட்­டு­மின்றி, உல­கமே போரில் ஈடு­பட்­டுள்­ளது. நிச்­ச­ய­மாக அந்த எதி­ரியை வீழ்த்­து­வோம். அதற்­காக எல்லா வளங்­க­ளை­யும் பயன்­ப­டுத்­து­வோம்.

"உல­கத்­தில், பாதிப்பு இல்­லாத நாடு­கள் பட்­டி­ய­லில் அமெ­ரிக்­காவை நிச்­ச­யம் இடம் பெறச் செய்­வேன்," என்று கூறி­னார்.