கொவிட்-19: மலேசியாவில் 1,030 சம்பவங்கள்; 15 மருத்துவ ஊழியர்களுக்கும் தொற்று

கொவிட்-19: மலேசியாவில் 1,030 சம்பவங்கள்; 15 மருத்துவ ஊழியர்களுக்கும் தொற்று

1 mins read
9cd4fe7d-d8de-452c-b9b8-c143ca25de83
கோலாலம்பூர் மருத்துவமனையில் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் சுகாதாரத்துறை ஊழியர். படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து 1,030 என்று ஆனது.

இன்று (மார்ச் 20) மட்டும் 130 புதிய சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன என்று மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

புதிய 130 சம்பவங்களில் 48 கோலாலம்பூரில் உள்ள ஜமேக் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசல் தொடர்புடையவை.

தற்போது நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருப்பதால், பலர் வீட்டில் இருக்கிறார்கள் என்றும் வீட்டில் இருந்தவாறே அவர்கள் உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்றும் டாக்டர் நூர் கூறினார்.

இதற்கிடையே 15 மலேசிய மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 12 பேர் தமது சுகாதார அமைச்சின் ஊழியர்கள் என்றும் எஞ்சிய மூவர் தனியார் மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் டாக்டர் நூர் சொன்னார்.

#மலேசியா #கொரோனா

குறிப்புச் சொற்கள்