மலேசியாவில் கிருமித்தொற்று சம்பவங்கள் 1,000ஐத் தாண்டி விட்டன

1 mins read
62df27f7-8dee-4a38-8ce8-05b9f43dfe73
கொவிட்-19 கிரு­மித் தொற்று மலே­சி­யா­வில் வேக­மாக பர­வி­வ­ரு­வ­தால் அந்­நாட்டு அர­சாங்­கம் நேற்று முன்­தி­னம் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணையை அறி­வித்­தது. மலே­சி­யா­வி­லி­ருந்து அன்றாடம் சிங்­கப்­பூருக்கு வந்து வேலை செய்­யும் ஊழி­யர்­களும் அவர்­க­ளது முத­லா­ளி­களும் மாற்று ஏற்­பா­டு­க­ளுக்கு விரைந்து செயல்­ப­டு­கின்­ற­னர். படம்: எஸ்டி, சோங் ஜுன் -

கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து 1,030 என்று ஆனது. நேற்று மட்டும் 130 புதிய சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன என்று மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

புதிய 130 சம்பவங்களில் 48 கோலாலம்பூரில் உள்ள ஜமேக் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசல் தொடர்புடையவை. தற்போது நாட்டின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருப்பதால், பலர் வீட்டில் இருக்கிறார்கள். வீட்டில் இருந்தவாறே அவர்கள் உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்றும் டாக்டர் நூர் கூறினார்.

இதற்கிடையே 15 மலேசிய மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 12 பேர் தமது சுகாதார அமைச்சின் ஊழியர்கள் என்றும் எஞ்சிய மூவர் தனியார் மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் டாக்டர் நூர் சொன்னார். டதில் கிருமித்தொற்று உறுதியானது.