இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு

இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு

1 mins read
2494793b-8cbb-424d-8573-d8bd7008a7ad
இலங்கையின் புட்டலம், நீர்கொழும்பு, சிலாவ், ஜாஎலா, மாத்தளை போன்ற பகுதிகளில் இலங்கை போலிஸ் படை ஊரடங்கை அறிவித்திருந்தது. இலங்கையில் இதுவரை 59 பேருக்கு இந்தக் கிருமி தொற்று இருக்கிறது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. படம்: ராய்ட்டர்ஸ் -

கொழும்பு: கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்கும் முயற்சியாக இலங்கையில் நேற்று முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நேற்று மாலை 6.00 மணி முதல் திங்கட் கிழமை வரை, அதாவது மார்ச் 23ஆம் தேதி வரை, அமலில் இருக்கும் என்று அதிபர் அலுவலகம் அறிவித்ததாக கொழும்பு பேஜ் செய்தித் தகவல் கூறுகிறது.

முன்னதாக, இலங்கையின் புட்டலம், நீர்கொழும்பு, சிலாவ், ஜாஎலா, மாத்தளை போன்ற பகுதிகளில் இலங்கை போலிஸ் படை ஊரடங்கை அறிவித்திருந்தது. இலங்கையில் இதுவரை 59 பேருக்கு இந்தக் கிருமி தொற்று இருக்கிறது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றத் தேர்தல் வியாழனன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய தேர்தல் ஆணை யம் அறிவித்ததை அடுத்து மறுநாள் வெள்ளிக்கிழமை ஊரடங்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.