சொகுசுக் கப்பல் பயணிகளை ஆஸ்திரேலியா தேடுகிறது

1 mins read
78a19219-5500-4bf7-91f8-f85f1f111a16
சொகுசுக் கப்பலில் பயணம் செய்து மத்திய சிட்னியில் தரையிறங்கிய 2,700 பயணிகளை ஆஸ்திரேலியா தேடுகிறது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன் அரசாங்க அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  படம்: சான் பிரதர்ஸ் -

சிட்னி: சொகுசுக் கப்பலில் பயணம் செய்து மத்திய சிட்னியில் தரையிறங்கிய 2,700 பயணிகளை ஆஸ்திரேலியா தேடுகிறது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன் அரசாங்க அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்துக்குப் பயணமாகும் 'ரூபி பிரின்சஸ்' கப்பலால் மிகக் குறைவாக அபாயம் நிகழக்கூடும் என்று தவறாக எண்ணி நியூ சவுத் வேல்ஸ் அதிகாரிகள் அக்கப்பலில் உள்ள பயணிகள் நாட்டில் அதிக மக்கள் வாழும் நகரில் தரையிறங்க அனுமதித்தனர்.

ஆனால், கப்பலின் பயணிகளில் மூவருக்கும் 1,100 கப்பல் சிப்பந்திகளில் ஒருவருக்கும் கொரோனா கருமித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று பின்னர் தான் அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் கிருமி தொற்றியிருக்கலாம். பயணிகள் தங்கள் மின்னஞ்சல்களை யும் தொடர்பு எண்களையும் கொடுத்திருக்கிறார்கள். அவற்றை வைத்து அவர்களைத் தொடர்புகொள்ள முடியும் என்று நம்புகிறோம்," என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதார அமைச்சர் பிராட் ஹசாட் தெரிவித்தார்.