500,000 பேர் கிருமி தொற்றியவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கக்கூடும் என மதிப்பீடு

500,000 பேர் கிருமி தொற்றியவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கக்கூடும் என மதிப்பீடு

3 mins read
40d4fb15-7b2f-4a51-b82f-8722bdf251fd
கொரோனா கிருமி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் 500,000 மேற்­பட்­டோர் தொடர்­பில் இருந்­தி­ருக்­க­லாம் என்று இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் மதிப்­பிட்­டுள்­ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

ஜகார்த்தா: கொரோனா கிருமி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் 500,000 மேற்­பட்­டோர் தொடர்­பில் இருந்­தி­ருக்­க­லாம் என்று இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் மதிப்­பிட்­டுள்­ளது.

'அபா­ய­க­ர­மான' இந்த 600,000 கும் 700,000க்கும் இடைப்­பட்­டோர் நாடு முழு­வ­தும் பரவி இருக்­கின்­ற­னர் என்­றும் தெற்கு ஜகார்த்­தா­தான் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள நக­ரம் என்­றும் இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ நேற்று நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய தொலைக்­காட்சி உரை­யில் தெரி­வித்­தார்.

"நாங்­கள் வீட்­டுக்கு வீடு சென்று விரைவு சோத­னையை நடத்­த­வி­ருக்­கி­றோம்," என்று கூறிய அதி­பர், அதி­கம் பாதிக்­கப்­பட்ட இதர பகு­தி­கள் பற்றி தெரி­விக்­க­வில்லை.

சுகா­தா­ரம் மற்­றும் பொரு­ளி­யல் பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளிக்க அனைத்து அதி­கா­ரங்­க­ளை­யும் பயன்­ப­டுத்­தப் போவ­தாக இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ சூளு­ரைத்­தார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றில் இந்­தோ­னீ­சியா அலட்­சி­யம் காட்­டு­கிறது என்று புகார் கிளம்பி உள்ள நிலை­யில், நேற்று நேர­டி­யாக தேசிய தொலைக்­காட்­சி­யில் அறிக்கை ஒன்றை அதி­பர் வாசித்­தார்.

கொரோனா கிரு­மிச் சோத­னை­களை இந்­தோ­னீ­சியா வேகப்­ப­டுத்தி இருப்­ப­தாக அவர் கூறி­னார். கொரோனா நோயா­ளி­க­ளின் தொடர்­பு­களை அடிப்­ப­டை­யாக வைத்து பல வட்­டா­ரங்­க­ளி­லும் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இந்­தோ­னீ­சியா கொரோனா கிருமி நோயாளி பற்றி மார்ச் 2ஆம் தேதி முதல் முறை­யாக அறி­வித்­தது. சளிக்­காய்ச்­சல் கார­ண­மாக பல­ரும் மாண்­டு­விட்­டார்­கள். அவர்­கள் மர­ணத்­திற்­குப் பிற­கு­தான் அவர்­க­ளைப் பாதித்து இருந்­தது கொரோனா என்­பது தெரி­ய­வந்­தது.

உல­கி­லேயே ஆக அதிக மக்­கள் வசிக்­கும் நாடு­க­ளின் பட்­டி­ய­லில் நான்­கா­வது இடத்­தில் உள்ள இந்­தோ­னீ­சியா கொரோனா சோத­னை­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்தி வரு­கிறது.

வெள்­ளிக்­கி­ழமை நில­வ­ரப்­படி 369 பேரை கொரோனா தொற்றி இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­தது என்று கொரோனா சிறப்பு நிர்­வாக அமைப்­பின் பேச்­சா­ளர் யுரி­யாந்தோ தெரி­வித்­தார்.

இத­னி­டையே, இந்­தோ­னீ­சி­யா­வில் கிருமி தொற்­றி­ய­வர்­கள் எண்ணிக்கை மதிப்­பி­டப்­ப­டு­வ­தை­விட அதி­க­மாக இருக்­கக்­கூ­டும் என்று அந்த நாட்­டின் செஞ்­சி­லு­வைச் சங்­கத் தலை­வர் கூறி­ய­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்து உள்­ளது.

இந்­தோ­னீ­சி­யா­வில் கொரோனா மர­ணம் 32ஐ தொட்­டுள்­ளது. பரி­சோ­த­னை­களை முடுக்­கி­விட்டு அத­னு­டைய முடி­வு­கள் தெரி­ய­வ­ரும் போது­தான் உண்­மை­யில் அது எத்­த­னை பேரைப் பாதித்து இருக்­கிறது என்­பது தெளி­வா­கப் புரி­ய­வ­ரும் என்று கல்லா என்ற செஞ்­சி­லு­வைச் சங்­கத் தலை­வர் கூறி­னார்.

இந்­தோ­னீ­சியா சந்­திந்து வரும் மற்­றொரு சவால்­களில் ஒன்­றாக, கொரோனா கிரு­மித்­தொற்­றைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­யாக இரண்டு வாரங்­க­ளுக்கு பள்­ளி­வா­சல்­களில் வெள்­ளிக்­கி­ழமை தொழு­கை­யில் கலந்­து­கொள்ள வேண்­டாம் என்று ஜகார்த்தா ஆளு­நர் அனிஸ் பஸ்­வே­டா­னின் கோரிக்­கையை நிரா­க­ரித்து விட்டு, ஜகார்த்­தா­வில் உள்ள பல்­வேறு பள்­ளி­வா­சல்­கள் நேற்று வெள்­ளிக்­கி­ழமை தொழு­கையை நடத்­தின.

ஜகார்த்­தா­வில் மட்­டும் 17 பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் மடிந்­துள்­ள­னர். 369 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ஜகார்த்தா நூருல் யாக்­கின் பள்­ளி­வா­ச­லுக்­குத் தொழு­கைக்­குச் சென்­றுகொண்­டி­ருந்த திரு டிரிடி எனும் ஹோட்­டல் ஒன்­றின் பாது­காப்பு அதி­காரி, "வாழ்­வும் சாவும் இறை­வ­னின் கையில் உள்­ளது," என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ள­ரி­டம் தெரி­வித்­தார்.

தொழு­கைக்­குச் சென்ற மற்­றொ­ரு­வ­ரான 15 வயது அரிஃப் நசிப் அரி­ஃபின், "முஸ்­லிம்­கள் கொரோனா கிருமி பற்றி பயப்­பட தேவை­யில்லை. பள்­ளி­வா­ச­லுக்­குச் சென்­ற­தால் கிருமி தொற்றி மாண்­டால், அது புனித மர­ணம்," என்று கூறி­னார்.

திரு அனிஸ் நேற்று முன்­தி­னம் முஸ்­லிம்­கள் வெள்­ளிக்­கி­ழமை தொழு­கை­யை­யும் கிறிஸ்­த­வர்­கள் ஞாயிறு பிரார்த்­த­னை­யை­யும் தவிர்க்க வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­தி­ருந்­தார்.