ஓய்வுபெற்ற மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப அழைப்பு

ஓய்வுபெற்ற மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப அழைப்பு

1 mins read
979318d5-2b0b-46a9-802e-0607dc560af0
கொரோனா கிரு­மித்­தொற்­றைச் சமா­ளிக்க உத­வும் வகை­யில் பணி­யில் இருந்து ஓய்­வு­பெற்ற 65,000 மருத்­து­வர்­களும் தாதி­ய­ரும் மீண்­டும் தேசிய சுகா­தா­ரச் சேவை­க­ளுக்­குத் திரும்­பு­மாறு பிரிட்­டன் அர­சாங்­கம் அவர்­க­ளுக்­குக் கடி­தம் அனுப்பி வரு­கிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

லண்­டன்: கொரோனா கிரு­மித்­தொற்­றைச் சமா­ளிக்க உத­வும் வகை­யில் பணி­யில் இருந்து ஓய்­வு­பெற்ற 65,000 மருத்­து­வர்­களும் தாதி­ய­ரும் மீண்­டும் தேசிய சுகா­தா­ரச் சேவை­க­ளுக்­குத் திரும்­பு­மாறு பிரிட்­டன் அர­சாங்­கம் அவர்­க­ளுக்­குக் கடி­தம் அனுப்பி வரு­கிறது.

முதல்­நிலை சேவை­க­ளுக்கு ஊக்கம் அளிக்க முன்­னாள் ஊழி­யர்­கள் தேவைப்­படு­கின்­ற­னர் என்று உய­ர­தி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். அவர்­க­ளு­டன், இறு­தி­ ஆண்­டில் பயி­லும் மருத்­துவ, தாதி­மைக் கல்வி மாண­வர்­களும் தற்­கா­லி­க­மா­கப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர்.

இந்த நிலை­யில், அனைத்து மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் போதிய மருத்­துவ வச­தி­கள் இருப்­பது உறு­தி­செய்­யப்­படும் என்று அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

கிரு­மித்­தொற்­றால் பிரிட்­ட­னில் இது­வரை கிட்­டத்­தட்ட 3,300 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்; 144 பேர் உயி­ரி­ழந்­து­விட்­டனர்.

கொரோனா கிருமி நாட்­டின் பொரு­ளி­ய­லை­யும் பாதித்து வரு­கிறது. பல நிறு­வ­னங்­கள் இழுத்து மூடப்­படும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளன; ஆயி­ரக்­க­ணக்­கான வேலை­கள் பறி­போ­கும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து, வேலை­களைப் பாது­காக்­கும் நோக்­கில் விரை­வில் ஊதிய மானிய தொகுப்­புத் திட்­டம் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

இத­னி­டையே, பிரிட்­ட­னில் ரயில் சேவை­கள் பாதி­யா­கக் குறைக்­கப்­ப­ட­ உள்­ளன. பெரும்பாலான விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களது சேவைகளைக் குறைத்துக்கொண்டதை அடுத்து, லண்டன் ஹீத்ரோ விமான நிலை­ய­மும் தனது செயல்பாடுகளைக் குறைத்­துக்­கொள்­ள­ இருக்­கிறது.

கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக பிரிட்டன் மக்கள் முடிந்த அளவிற்கு வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.