சீனாவை மிஞ்சியது இத்தாலி

ரோம்: கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை பத்­தா­யி­ரத்­தைத் தாண்­டி­விட்­டது. கிருமி தொற்­றும் வேகமும் அதி­க­ரித்­து­விட்­டது. முதல் மூன்று மாதங்­களில் நூறா­யி­ரம் பேர் பாதிக்­கப்­பட்ட நிலை­யில், அடுத்த 12 நாட்­களி­லேயே மேலும் 100,000 பேரை கொரோனா கிருமி தொற்­றி­விட்­ட­தாக உலக சுகா­தார நிறு­வ­னத் தர­வு­கள் கூறு­கின்­றன.

கிரு­மித்­தொற்று தொடங்­கிய இட­மான சீனா­வைக் காட்­டி­லும் இத்­தா­லி­யில் பலி­யா­னோர் எண்­ணிக்கை உயர்ந்­து­விட்­டது. சீனா­வில் இது­வரை கிட்­டத்­தட்ட 81,000 பேரைக் கிருமி பாதித்­துள்­ளது. அவர்­களில் 3,248 பேர் மாண்­டு­விட்­ட­னர். இத்­தா­லி­யில் இது­வரை 41,000 பேரை கிருமி தொற்­றிய நிலை­யில், உயிரிழந்தோர் எண்­ணிக்கை 3,405ஆக அதி­க­ரித்­து உள்­ளது. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் அங்கு 427 பேர் மர­ண­ம் அடைந்­த­னர்; புதி­தாக 5,322 பேரைக் கிருமி தொற்­றி­யது.

கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­படுத்த இத்­தாலி அர­சாங்­கம் தன்­னா­லான அனைத்து முயற்­சி­க­ளை­யும் எடுத்து வந்­தா­லும் அது குறைந்­த­பா­டில்லை.

“இயல்­ப­றி­வைப் பயன்­ப­டுத்­துங்­கள்; முடிந்­த­ளவு எச்­ச­ரிக்­கை­யாக இருங்­கள்,” என்று இத்­தா­லிய பிர­தமர் ஜுசெப்பே கோன்டே அறை­கூவல் விடுத்­துள்­ளார்.

உண­வுக்­க­டை­கள், மருந்­துக் கடை­கள் தவிர்த்து மற்ற அனைத்­தை­யும் மூடி, நாட்டை முடக்­கி­ இருப்­பதை 96% இத்­தா­லி­யர்­கள் வரவேற்­றுள்­ள­தாக ஓர் ஆய்வு முடிவு தெரி­விக்­கிறது.

கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களை மேலும் சில காலத்­திற்கு நீட்­டிப்­பதைத் தவிர்க்க முடி­யாது என்று திரு கோன்டே குறிப்­பிட்­டுள்­ளார்.

புதிய கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­ப­டாது என்­றா­லும் இப்­போ­தைய கட்­டுப்­பா­டு­களை மக்­கள் மதித்து நடக்­கா­வி­டில் அர­சாங்­கம் அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்த வேண்­டி­ இருக்­கும் என்­றும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

மளி­கைப் பொருட்­கள் வாங்க அல்­லது வேலைக்­குச் சென்று வர போன்ற பொருத்­த­மான கார­ணம் இல்லாமல் வீதி­களில் நட­மா­டு­வோருக்கு 206 யூரோ (S$320) அப­ரா­தம் விதிக்­கப்­ப­டு­கிறது.

இத்­தாலி, சீனா­விற்கு அடுத்­த­படி­யாக ஈரான் (1,284), ஸ்பெ­யின் (1,002), பிரான்ஸ் (372) ஆகிய நாடு­களில் கொரோ­னா­வால் அதி­க­மான மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!