பாரிஸ்: கொரோனா கிருமித்தொற்று பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் சிக்கியிருக்கும் 130,000 பிரெஞ்சுக்காரர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜேன் இவெஸ் லா டிரையன் தெரிவித்துள்ளார்.
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் இருந்து ஏற்கெனவே 17,000 பேரை பிரான்சுக்கு அழைத்து வந்துவிட்டதாகவும் இன்னும் 20,000 பேர் அங்கு இருப்பதாகவும் திரு லா டிரையன் கூறினார்.
அப்படி நாட்டிற்குத் திரும்பும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரான்சில் கிருமித்தொற்று நாளுக்கு நாள் கிட்டத்தட்ட 40% அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு கிருமித்தொற்றால் 372 பேர் உயிரிழந்துவிட்டனர்; கிட்டத்தட்ட 11,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

