முடங்கியது அர்ஜெண்டினா

முடங்கியது அர்ஜெண்டினா

1 mins read
1a4648b5-3e2b-4dcc-a85d-85b43f751298
கொரோனா தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக அர்­ஜெண்­டி­னா­வில் முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

பியூ­னஸ் அய்­ரிஸ்: கொரோனா தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக அர்­ஜெண்­டி­னா­வில் முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பேரங்­கா­டி­கள், மருந்­துக்­க­டை­கள் போன்ற அத்­தி­யா­வ­சிய கார­ணங்­க­ளைத் தவிர்த்து வேறு எதற்­கா­க­வும் அர்­ஜெண்­டினா மக்கள் வீட்­டை­விட்டு வெளியே செல்ல முடி­யாது. நேற்று நடை­மு­றைக்கு வந்த இந்­தக் கட்­டுப்­பாடு, இம்­மாத இறுதி வரை நீடிக்­கும் என்று அதி­பர் அல்­பர்ட்டோ ஃபெர்னாண்­டஸ் அறி­வித்­துள்ளார்.

"கட்­டுப்­பா­டு­களை அமல்­படுத்து­வ­தில் நீக்­குப்­போக்கு அறவே இருக்­காது," என்­றும் அவர் உறு­தி­யா­கக் கூறி­யுள்­ளார்.

எல்­லை­கள் மூடல், கிட்­டத்­தட்ட அனைத்து விமான சேவை­களும் ரத்து, பள்­ளி­கள் மூடல், கிரு­மித் தொற்­றுக்­கான அறி­குறி தெரிந்­தால் அல்­லது கிருமி பாதித்த பகு­தி­களில் இருந்து வந்­தால் கட்­டா­ய­மாக 14 நாட்­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­தல் என ஏற்­கெ­னவே பல கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. கிரு­மித்­தொற்­றால் அங்கு இது­வரை மூவர் மாண்டுவிட்டனர்.