மலேசியாவில் மேலும் 153 பேருக்கு கிருமித்தொற்று; நான்காவது உயிரிழப்பு

1 mins read
8d00041b-c248-4fc4-b288-638bb362dd30
கோலாலம்பூர் அருகே நடைபெற்ற சமய ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்ட 50 வயது மலேசியர் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்த நான்காவது நபர். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலேசியாவில் புதிதாக 153 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (மார்ச் 21) உறுதிசெய்யப்பட்டது.

அவர்களையும் சேர்த்து, அங்கு கிருமி தொற்றியுள்ளோரின் எண்ணிக்கை 1,183ஆக உயர்ந்துள்ளது.

தென்கிழக்காசியாவில் ஆக அதிகமானோர் கிருமித்தொற்று கண்டிருப்பது மலேசியாவில்தான்.

அந்நாட்டில் கொரோனாவுக்கு இன்று நான்காவது நபர் உயிரிழந்தார்.

கோலாலம்பூர் அருகே நடைபெற்ற சமய ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்ட 50 வயது மலேசியர் அவர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மலேசியாவில் இதுவரை 24 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளதாகவும் கூறிய அவர், அவர்களில் 19 பேர் தமது அமைச்சைச் சேர்ந்தவர்கள் என்றார்.

#மலேசியா #கொரோனா

குறிப்புச் சொற்கள்