கொவிட்-19: மலேசியாவில் உயிரிழப்பு 8 ஆனது

கொவிட்-19: மலேசியாவில் உயிரிழப்பு 8 ஆனது

2 mins read
f811f13b-e7fa-4e8e-a0d9-039d331a5319
மலேசியாவில் விதிக்கப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மதித்து மக்கள் வீடுகளிலிலேயே இருப்பதை உறுதி செய்யும்பொருட்டு மலேசியாவில் ராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கோலாலம்பூரில் ரோந்து செல்லும் போலிஸ் வாகனம். படம்: இபிஏ -

மலேசிடாவில் இன்று (மார்ச் 21) மேலும் நால்வர் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்திருப்பதையடுத்து, மாலை 6.30 மணி நிலவரப்படி அங்கு 8 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார நிர்வாக இயக்குநர் டாக்டர் நூர் ஹி‌‌‌ஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கிருமித்தொற்றால் உயிரிழந்த ஐந்தாவது நபர் 79 வயது பெண். அவர் போர்னியோ மருத்துவ நிலையத்தில் கடந்த புதன்கிழமை உயிரிழந்தார். காய்ச்சல், இருமல் போன்றவற்றுக்காக அவர் 16ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணின் 40 வயது மகள், கிருமித்தொற்றால் உயிரிழந்த ஆறாவது நபர். அவர் சரவாக் பொது மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து அவருக்கு இருமல், காய்ச்சல் இருந்ததாகக் கூறப்பட்டது. அவர் இன்று உயிரிழந்தார்.

கிருமித்தொற்றால் மலேசியாவில் உயிரிழந்த ஏழாவது நபர் வியட்னாமுக்கு சென்று வந்ததாகவும் கொவிட்-19 பாதிப்புக்குள்ளான ஒருவருடன் தொடர்பில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. ஒரு வார காலமாக காய்ச்சல், இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அவர் மார்ச் 18ஆம் தேதி கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது.

கிருமித்தொற்றால் உயிரிழந்த எட்டாவது நபர் 69 வ்அயது ஆடவர். அவர் டப்லிக் வட்டாரத்துடன் தொடர்புடையவர். இம்மாதம் 16ஆம் தேதி டம்பாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் ராஜா ப்ரெம்புவான் சைனப் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இம்மாதம் 12ஆம் தேதி முதல் காய்ச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது.அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இன்றைய நிலவரப்படி மலேசியாவில் 1,183 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#மலேசியா #கொரோனா #உயிரிழப்பு #எட்டு

குறிப்புச் சொற்கள்
மலேசியாகொரோனாஉயிரிழப்பு