பாகிஸ்தானில் கிருமித்தொற்று சம்பவங்கள் 500ஐ கடந்தன; நாடு தழுவிய முடக்கநிலையை அறிவிக்க பிரதமர் மறுப்பு

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தா­னில் கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 500ஐ கடந்­து­விட்ட நிலை­யில், நாடு தழு­விய முடக்­க­நி­லையை அறி­விக்க அந்­நாட்­டுப் பிர­த­மர் இம்­ரான் கான் மறுத்­துள்­ளார்.

பாகிஸ்­தா­னில் கொரோனா கிருமித்­தொற்றால் இது­வரை மூவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வங்­க­ளின் மொத்த எண்­ணிக்கை நேற்று முன்­தி­னம் 501ஆக இருந்­தது.

அந்­நாட்­டின் சிந்த் மாநி­லத்­தில் மட்­டும் பாதி­ய­ள­வாக 252 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

கிருமி பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த, பாகிஸ்­தான் முழு­வ­தும் முடங்­க­வும் விமா­னச் சேவை­களை ரத்து செய்­ய­வும் பகுப்­பாய்­வா­ளர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

எனி­னும், அதற்கு செவி­ம­டுக்க மறுத்­து­விட்ட பிர­த­மர் இம்­ரான் கான், “நாட்டை முடக்­கு­வது என்­பது ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிப்­ப­தற்­குச் சமம். அப்­படி செய்­தால், நாட்­டில் பதற்­ற­நிலை அதி­க­ரிக்­கும். ஏழை, எளி­ய­வர்­க­ளுக்­குப் பெரும் பாதிப்பு ஏற்­படும். எனவே, இந்­ந­ட­வ­டிக்கை நமக்கு சரிப்­பட்டு வராது,” என்று சொன்­னார்.

நாட்­டுப் பொரு­ளி­ய­லுக்­கான உத­வித் திட்­டம் ஒன்று நாளை மறு­தி­னம் (செவ்­வாய்க்­கி­ழமை) அறி­விக்­கப்­படும் என்று பிர­த­மர் இம்­ரான் கான் தெரி­வித்­தார்.

“பொரு­ளி­யல் உத­வித் திட்­டங்­களை அறி­விக்­கும் மற்ற உலக நாடு­க­ளு­டன் எங்­க­ளால் போட்­டி­யிட முடி­யாது.

“எனி­னும், சமு­தா­யத்­தில் கீழ்­நி­லை­யில் உள்­ள­வர்­களை கொரோனா பாதிப்­பி­லி­ருந்து நாங்­கள் பாது­காப்­போம். அறி­விக்­கப்­ப­ட­வுள்ள உத­வித் திட்­டம் அந்த முயற்­சிக்கு கைகொ­டுக்­கும்,” என்று அவர் கூறி­னார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கண்­ட­றி­வ­தற்­கும் அதைக் குணப்­ப­டுத்­து­வ­தற்­கும் பாகிஸ்­தா­னில் அத்­தி­யா­வ­சிய மருத்­து­வச் சாத­னங்­கள் போது­மான அள­வில் இல்லை.

சாத­னங்­கள் வழங்­கப்­படும் வரை தாங்­கள் போராட்டம் நடத்­தப் போவ­தாக மருத்­து­வர்­கள் எச்­ச­ரித்­து உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!