உலகளவில் உணவு விலை அதிகரிக்கும் அபாயம்

உலகளவில் உணவு விலை அதிகரிக்கும் அபாயம்

2 mins read
cd560aae-a0d3-478c-9b4e-a369805656d0
கொரோனா கிருமி பர­வ­லால் நாடு­கள் முடங்­கு­வ­தா­லும் பதற்­றத்­தின் கார­ண­மாக அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வாங்­கிக் குவிப்­ப­தா­லும் உல­க­ள­வில் உண­வுப் பொருட்­க­ளின் விலை அதி­க­ரிக்­கும் ஆபத்து இருப்­ப­தாக பொரு­ளி­யல், விவ­சா­யத்­துறை வல்­லு­நர்­கள் எச்­ச­ரிக்­கின்­ற­னர். படம்: எஸ்டி, ஜின் தே -

கொரோனா கிருமி பர­வ­லால் நாடு­கள் முடங்­கு­வ­தா­லும் பதற்­றத்­தின் கார­ண­மாக அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வாங்­கிக் குவிப்­ப­தா­லும் உல­க­ள­வில் உண­வுப் பொருட்­க­ளின் விலை அதி­க­ரிக்­கும் ஆபத்து இருப்­ப­தாக பொரு­ளி­யல், விவ­சா­யத்­துறை வல்­லு­நர்­கள் எச்­ச­ரிக்­கின்­ற­னர்.

ஐரோப்­பா­வி­லும் அமெ­ரிக்­கா­வி­லும் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை வேக­மாக அதி­க­ரித்து வரும் வேளை­யில், உல­கப் பொரு­ளி­ய­லுக்கு முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு பணக்­கார நாடு­கள் உதவி செய்து வரு­கின்­றன.

உல­கம் முழு­வ­தும் இது­வரை 270,000க்கும் அதி­க­மா­னோ­ரைத் தொற்றி, 11,000க்கும் அதி­க­மா­னோ­ரின் உயி­ரைப் பறித்­து­விட்ட கொள்­ளை­நோ­யான கொரோனா, உல­கையே நிலை­குத்­தச் செய்­துள்­ளது. இரண்­டாம் உல­கப் போர், 1918ஆம் ஆண்­டில் ஏற்­பட்ட ஸ்பா­னிய சளி, காய்ச்­சல் பர­வல் உள்­ளிட்ட முக்­கிய வர­லாற்று நிகழ்­வு­க­ளு­டன் கொரோனா கிருமி ஒப்­பி­டப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் முதல் அமெ­ரிக்கா வரை உல­கின் பல நாடு­களில் உள்ள பேரங்­கா­டி­களில் அரிசி, கை சுத்­தி­க­ரிப்­பான், கழி­வறை தாள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வாங்க வாடிக்­கை­யா­ளர்­கள் நீண்ட வரிசை பிடித்து நின்­ற­னர்.

தானியங்களை ஏற்­று­மதி செய்­யும் தாய்­லாந்­தில் அரிசி விலை, 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்­திற்­குப் பிறகு ஆக அதி­க­மாக உயர்ந்­துள்­ளது.

பிரான்­சின் தானிய உற்­பத்­தித்­துறை, தொழிற்­சா­லை­க­ளை­யும் துறை­மு­கங்­களையும் தொடர்ந்து இயக்­கு­வ­தற்­குத் தேவை­யான சரக்கு வாக­னங்­க­ளை­யும் ஊழி­யர்­க­ளை­யும் தேடு­வ­தில் பெரும் சிர­மத்தை எதிர்­நோக்­கு­கிறது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தைச் சேர்ந்த ஒரு சில நாடு­கள் எல்­லை­களை மூடி­யி­ருப்­ப­தால், உணவு விநி­யோ­கத்­தில் தடை ஏற்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்டு கச்சா எண்­ணெய் விலை குறைந்­தி­ருப்­ப­தால், எண்­ணெய் ஏற்­று­மதி செய்­யும் சவூதி அரே­பியா உள்­ளிட்ட மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கும் சிக்­கல் ஏற்­பட்­டுள்­ளது.