மட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300ஐ கடந்துவிட்டது. வெள்ளிக்கிழமை 1,002ஆக இருந்த அந்த எண்ணிக்கை, நேற்று 1,326ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல் தெரிவித்தது. அந்நாட்டில் பதிவான கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று 24,926ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,980ஆக இருந்தது.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை, கொரோனா கிருமித்தொற்றால் இத்தாலியை அடுத்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு ஸ்பெயின்.

