ஈரானிலிருந்து எட்டு சிங்கப்பூரர்களை மீட்ட மலேசியா

ஈரானிலிருந்து எட்டு சிங்கப்பூரர்களை மீட்ட மலேசியா

1 mins read
43d98587-3cc9-44bb-8f94-143702072952
கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஈரானிலிருந்து மலேசியர்களை மீட்க மலேசிய அரசாங்கத்தால் அனுப்பபட்ட விமானம் மூலம் எட்டு சிங்கப்பூரர்கள் மலேசியாவை அடைந்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ் -

கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஈரானிலிருந்து மலேசியர்களை மீட்க மலேசிய அரசாங்கத்தால் அனுப்பபட்ட விமானம் மூலம் எட்டு சிங்கப்பூரர்கள் மலேசியாவை அடைந்துள்ளனர்.

இந்த எட்டு பேரும் சிங்கப்பூர் திரும்புவதற்கு முன்பு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானிலிருந்து அந்த சிங்கப்பூரர்களை வெளியேற்ற உதவுமாறு மலேசிய அரசாங்கத்திடமும் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதரகத்திடமும் கோரிக்கை விடுத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று அந்த எட்டு சிங்கப்பூரர்களையும் அழைத்து வந்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்," என்று வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மலேசிய வெளியுறவு அமைச்சுக்கும் ஈரானில் உள்ள மலேசியத் தூதரகத்துக்கும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று நன்றி தெரிவித்துக்கொண்டார்.

"இன்றைய நிச்சயமற்ற சூழ்நிலையில் அனைத்துலக, இருதரப்பு ஒத்துழைப்பு இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எங்களுக்கு உதவிய அண்டை நாட்டுக்கு நன்றி தெரிவிக்கிறோம்," என்றார் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்.

ஈரானிலிருந்து மலேசியர்களை மலேசியாவுக்கு அழைத்து வருவதற்காகவே ஏர் ஏஷியா விமானம் அனுப்பி லைக்கப்பட்டது. அந்த விமானம் நேற்று அதிகாலை 6.35 மணி அளவில் கோலாலம்பூரில் தரையிறங்கியதாக மலேசியாவின் தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் தெரிவித்தது.