சீனா: புதிதாக 46 பேருக்குத் தொற்றியது; 45 பேர் வந்தவர்கள்

1 mins read
0d6f1822-3599-44b3-8617-78700c432328
வூஹான் கிருமித் தொற்று காரணமாக சீனாவில் மாண்டோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்தது. இதுவரை 2,300 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். படம்: ஏஎப்பி -

பெய்ஜிங்: சீனாவில் நேற்று புதிதாக 46 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியது என்றும் அவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் அந்த நாடு தெரிவித்தது.

சீனாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று, நேற்றுடன் தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றம் கண்டதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது. சீனாவில் உள்நாட்டில் கிருமி பரவல் மிகவும் குறைந்துவிட்டது. கடந்த நான்கு நாட்களில் நேற்று மட்டும் ஒரே ஓர் உள்ளூர்க்காரரை கொரோனா தொற்றியது.

புதிதாக கிருமி தொற்றுவோரில் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வருவோரே பெரும்பாலானவர்கள் என்பதால், பெய்ஜிங்கில் தரை இறங்கும் எல்லா அனைத்துலக விமானங்களும் வேறு விமான நிலையங் களுக்குத் திருப்பிவிடப்படும் என்று சிவில் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது.