நடமாட்டக் கட்டுப்பாடுகள்: மலேசிய வீதிகளில் ராணுவம்

நடமாட்டக் கட்டுப்பாடுகள்: மலேசிய வீதிகளில் ராணுவம்

2 mins read
c44a29d7-cf00-484b-8258-760e878b7a5e
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் முகக்கவசங்களுடன் ராணுவத்தினர் ராணுவ டிரக் வாகனம் ஒன்றில் நேற்று வீதியில் வலம் வந்தனர். பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் ராணுவம் போலிசுக்கு உதவி வருகிறது. படம்: ஏஎஃப்பி -

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வில் ெகாரோனா கிருமித்தெற்றால் மருத்துவர் ஒருவர் மரணமடைந் துள்ளார். அந்த நாட்­டில் இந்­தக் கிரு­மிக்கு மொத்­தம் ஒன்­பது பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

இந்த நிலை­யில், பொது­மக்­கள் நட­மாட்­டத்­துக்கு விதிக்­கப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டு­களை அமல்­ப­டுத்­து­வ­தில் நேற்று ராணு­வ­மும் வீதி­யில் இறங்­கி­யது. போலி­சுக்கு இந்­தப் பணி­யில் அது உதவி வரு­கிறது.

மலே­சி­யா­லில் பெர்­லிஸ் மாநி­லத்­தில் உள்ள துவாங்கு ஃபாசியா மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த 48 வயது மருத்­து­வர், கொரோனா கிருமி கார­ண­மாக நேற்று முற்­ப­கல் 10.33 மணிக்கு இறந்­து­விட்­டார் என்று சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் நூர் ஹசிம் அப்­துல்லா அறி­வித்­தார்.

அந்த மருத்­து­வர் துருக்கி சென்று இருந்­தார் என்­றும் அவர் மார்ச் 8ஆம் தேதி திரும்பி வந்­தார் என்­றும் அவர் கூறி­னார். மருத்­து­வ­ருக்கு கொரோனா தொற்றி இருப்­பது மார்ச் 18 ஆம்­ தேதி கண்டு­பி­டிக்­கப்­பட்டதாக­வும் அந்த அதி­காரி குறிப்­பிட்­டார்.

தென் கிழக்கு ஆசி­யா­வில் கொரோனா பாதிப்பு மலே­சி­யா­வில் தான் அதி­கம். சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி அங்கு 1,183 பேரைக் கொரோனா பாதித்து இருந்­தது.

இத­னி­டையே, மெர்காஸ் 11 படைப்பிரி­வைச் சேர்ந்த மலே­சிய ஆயு­தப்­ப­டை­கள் வீதி­களில் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஏர் டைம்ஸ் நியூஸ் நெட்­வொர்க் அமைப்பு தெரி­வித்­தது.

மலே­சி­யா­வில் கொரோனா பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த சென்ற புதன்­கி­ழமை முதல் பொதுமக்­கள் நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டன. ஆனா­லும் பல­ரும் வீதி­களில் நட­மா­டு­கி­றார்­கள் என்­ப­தால் போலி­சுக்கு உத­வி­யாக ராணு­வ­மும் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­படும் என்று தற்­காப்பு அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி சென்ற வெள்­ளிக்­கி­ழமை அறி­வித்து இருந்­தார்.

அந்­தக் கட்­டுப்­பாட்டை அமல்­படுத்­தும் பணி­யில் இருக்­கும் ராணு­வத்­தி­னர், பொது­மக்­கள் மீது படை­பலத்­தைப் பயன்­ப­டுத்­து­வார்­கள் என்று வாட்ஸ்­அப் செய­லி­யில் பர­விய குரல் பதிவைத் தற்­காப்­புப் படை தலைமை தள­பதி அஃபென்டி புவாங் மறுத்­தார். போலி செய்­தி­களைப் பரப்பி சிக்­கிக்­கொள்ள வேண்­டாம் என்­றும் பொதுமக்களை அவர் எச்­ச­ரித்­தார்.

இத­னி­டையே, ஆறு போலிஸ்­கா­ரர்­கள் உட­லில் கொரோனா அறி­குறி தெரி­ய­வந்­துள்­ள­தா­க­வும் பரி­சோ­தனை முடி­வு­க­ளுக்­காக அவர்­க­ளின் உறவி­னர்­கள் 335 பேர் காத்து இருப்­ப­தா­க­வும் மலே­சி­ய போலிஸ் தலை­வர் டான் ஸ்ரீ அப்­துல் ஹமித் குறிப்­பிட்­டார்.

இவ்வேளையில், மலே­சி­யா­வில் தலை­ந­கர் கோலா­லம்­பூர் அருகே இருக்­கும் ஒரு பள்­ளி­வா­ச­லில் நடந்த நான்கு நாள் சமய நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொண்­ட­வர்­கள் இப்­போது அதி­கா­ரி­க­ளு­டன் ஒத்­து­ழைத்து வரு­வ­தா­க­வும் அவர்­க­ளுக்­குப் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­படு­வ­தா­க­வும் ஏற்­பாட்­டா­ளர் ஒரு­வர் குறிப்­பிட்­டார். அந்­தச் சமய நிகழ்ச்­சிக்­கும் தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் கொரோனா கார­ண­மாக குறைந்­த­பட்­சம் 840 பேர் பாதிக்­கப்­பட்­ட­தற்­கும் தொடர்பு இருப்­ப­தா­கக் கூறப்

­ப­டு­கிறது. இதன் தொடர்­பில் ஆயி­ரக்கணக்­கா­ன­வர்­கள் இன்­ன­மும் அடை­யா­ளம் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு வரு­வ­தாக அர­சாங்கம் தெரி­வித்து இருக்கிறது.