பிலிப்பீன்ஸ்: புதிதாக 6 மரணங்கள்; 73 பேர் பாதிப்பு

பிலிப்பீன்ஸ்: புதிதாக 6 மரணங்கள்; 73 பேர் பாதிப்பு

1 mins read
78f57a83-eb0a-46c7-972d-6ebb6336e891
பிலிப்பீன்ஸின் கொய்ஸோன் நகரில் பேருந்தில் ஏறவிருக்கும் சுகாதார ஊழியர்களின் உடல் வெப்பநிலையைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

மணிலா: பிலிப்பீன்சில் நேற்று கொரோனாவுக்குப் புதிதாக ஆறு பேர் பலியாகிவிட்டனர். அந்தக் கிருமி 73 பேரைத் தொற்றியது. அவர்களையும் சேர்த்து அந்த நாட்டில் மொத்தம் 380 பேரை கொரோனா பீடித்து இருக்கிறது. கொரோனா மொத்தம் 25 பேரைக் கொன்று விட்டதாகவும் நேற்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.