தென்கொரியாவில் தொடர்ந்து இறங்குமுகம்; 98 பேர் பாதிப்பு

தென்கொரியாவில் தொடர்ந்து இறங்குமுகம்; 98 பேர் பாதிப்பு

1 mins read
53ff78c2-cac9-45d0-89ae-715908f828d7
கடந்த 11 நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 ஆகவே இருந்துவருகிறது. இந்த எண்ணிக்கை, பிப்ரவரி 29ல் 909 பேராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படம்: ராய்ட்டர்ஸ் -

சோல்: தென்கொரியாவில் நேற்று புதிதாக கொரோனா கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை 98 பேராக இருந்தது. அன்றாடம் புதிதாக கொரோனா பீடிக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்று அந்த நாட்டின் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் நேற்று தெரிவித்தது.

தென்கொரியாவில் நேற்றுவரை பாதிக்கப்பட்டு இருந்தவர்கள் எண்ணிக்கை மொத்தம் 8,897 என்று தெரிவிக்கப்பட்டது. 104 பேர் மாண்டுவிட்டனர்.

கடந்த 11 நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 ஆகவே இருந்துவருகிறது. இந்த எண்ணிக்கை, பிப்ரவரி 29ல் 909 பேராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.