விசா இருந்தாலும் வியட்னாம் போகமுடியாது; தற்காலிகத் தடை

விசா இருந்தாலும் வியட்னாம் போகமுடியாது; தற்காலிகத் தடை

1 mins read
eed5cc7f-b4b9-4278-be3a-14ce8414ca5c
விசா வைத்திருப்பவர்கள் உட்பட வெளிநாட்டினர் யாரும் உள்ளே வரமுடியாதபடி வியட்னாம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.  படம்: இபிஏ-இஎஃப்எஃப் -

ஹனோய்: ஏற்கெனவே விசா பெற்றுள்ளவர்கள் உட்பட எல்லா வெளிநாட்டினரும் உள்ளே வர முடியாதபடி வியட்னாம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

இருந்தாலும், அரசதந்திர அல்லது அதிகாரபூர்வமான வருகையாளர்களுக்கு அனுமதி உண்டு என்று அந்த நாடு நேற்று அறிவித்தது.

வல்லுநர்கள், தொழில்துறை நிர்வாகிகள், அல்லது அதிக தேர்ச்சி, ஆற்றல்மிக்கவர்கள் நாட்டிற்குள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கு அவர்களிடம் மருத்துவச் சான்று இருக்கவேண்டும்.

நாட்டிற்குள் வரும்போது ஒரு படிவத்தை அவர்கள் நிரப்பித்தர வேண்டும். பிறகு அவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.