தாய்லாந்தில் ஆக அதிகம்: புதிதாக 188 பேர் பாதிப்பு

தாய்லாந்தில் ஆக அதிகம்: புதிதாக 188 பேர் பாதிப்பு

1 mins read
33776955-8196-447e-b7dc-fdaf4264e9be
தாய்லாந்தில் நேற்று 188 பேரை கொரோனா தொற்றியது. ஒரே நாளில் ஆக அதிகம் பேர் கிருமித் தொற்றுக்கு ஆளானது நேற்றுதான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். படம்: ஏஎப்பி -

பேங்காக்: தாய்லாந்தில் நேற்று 188 பேரை கொரோனா தொற்றியது. ஒரே நாளில் ஆக அதிகம் பேர் கிருமித் தொற்றுக்கு ஆளானது நேற்றுதான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த நாட்டில் நேற்று வரை மொத்தம் 599 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். குத்துச்சண்டை அரங்கு ஒன்றில் கலந்துகொண்ட பலருக்கும் கிருமி பரவியதாக முன்பு தெரிவிக்கப்பட்டது.

புதிதாக நேற்று கொரோனா தொற்றியவர்களுக்கும் அந்த அரங்கிற்கும் தொடர்பு உண்டு என்று நேற்று அதிகாரபூர்வமான தகவல்கள் குறிப்பிட்டன.