1 மீட்டர் நியதி: ஆஸ்திரேலியா தீவிரம்; பொருளியலுக்கு மேலும் A$66 பில்லியன்

1 மீட்டர் நியதி: ஆஸ்திரேலியா தீவிரம்; பொருளியலுக்கு மேலும் A$66 பில்லியன்

1 mins read
42a713cd-f550-44f3-87f4-8796dbbdd994
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் விமான நிலையத்தில் முகக்கவசத்துடன் வரும் பயணி. படம்: இபிஏ -

சிட்னி: கொரோனா கார­ண­மாக பொரு­ளி­ய­லுக்கு ஏற்­பட்­டு­வ­ரும் பாதிப்­பு­க­ளைச் சமா­ளிக்­கும் வகை­யில் ஆஸ்­திரே­லியா அர­சாங்­கம் மேலும் A$66 பில்­லி­யன் உத­வித் திட்­டத்தை அறி­வித்­துள்­ளது.

அதே­வே­ளை­யில், மக்­கள் நெருங்கி கலந்­து­ற­வா­டா­மல் 1 மீட்டர் இடை­வெளி நியதி­யைக் கடைப்­பி­டிக்­க­வேண்­டி­யது அவ­சர அவ­சி­யம் என்­ப­தால் அந்த விதியை அமல்­ப­டுத்­து­வ­தில் அர­சாங்­கம் உறு­தி­யாக இருப்­ப­தா­க­வும் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் அறி­வித்­தார்.

பொரு­ளி­யலை ஊக்குவிக்க ஆஸ்திரேலிய அர­சாங்­கம் ஏற்­கெனவே A$17.6 பில்­லி­யன் திட்­டத்தை அறி­வித்­து உள்­ளது.

கொரோனா பர­வ­லைத் தடுக்க மக்­கள் 1 மீட்­டர் இடை­வெளி விதி­முறையைக் கடைப்­பி­டித்து நடக்­க­வேண்­டும் என்று அர­சாங்­கம் திரும்­பத்­தி­ரும்ப கேட்­டுக்கொண்டபோதி­லும் மக்­கள் பல­ரும் அதை அலட்­சி­யப்­ப­டுத்­து­வ­தாகத் தெரி­கிறது என்று பிர­த­மர் குறிப்­பிட்­டார். ஆகை­யால் இந்த விதியைக் கடு­மை­யாக அமல்­ப­டுத்­தப்போவ­தாகப் பிர­த­மர் சூளுரைத்­தார். சிட்னி நக­ரின் பெரும்­பா­லான கடற்­க­ரை­களை அந்த நகர அதி­கா­ரிகள் மூடி­விட்­டார்­கள். ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கொரோனா ஏழு பேரைக் கொன்று இருக்­கிறது. அங்கு 1,098 பேரை அந்­தக் கிரு­மித் தொற்றி இருக்­கிறது.

மாகாணங்களின் எல்லைகளை மூடவும் தேவையற்ற சேவைகளை நிறுத்திவிடவும் அதிகாரிகள் ஆயத்தமாகி வருகிறார்கள்.