இதற்கிடையே, கிருமிப் பரவலால் தவிக்கும் இத்தாலிக்கு உதவுவதற்காக ரஷ்ய ராணுவம் அங்கு அனுப்பப்படவுள்ளது.
இத்தாலிய பிரதமருக்கும் ரஷ்ய அதிபருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, இத்தாலிக்கு உதவ விளாடிமிர் புட்டின் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் ராணுவ மருத்துவப் பிரிவின் எட்டு படைக்குழுக்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் கிருமிப் பரவலைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்டவையும் அனுப்பப்படவுள்ளன. ரஷ்யாவில் இதுவரை 306 பேர் கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

